மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதையும், பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கிரீடா சக்தி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஹலீம்தீன், கல்வி பிரதிப் பணிப்பாளர் திரு. ஞானராஜ், கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. பிர்காஷ், திரு. M. சஜித் மற்றும் DCC அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. ரைசுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், கிரீடா சக்தி திட்டத்தின் பயனாளிகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (PET), பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு DSDO திரு. M. R. M. ஜஸ்மின் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றதுடன், பயிற்றுநர் திரு. P. ஜூலிஸ் கிளிட்டாஸ் அவர்களின் ஆதரவும் வழங்கப்பட்டது.
கிரீடா சக்தி திட்டத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் அதன் மூலம் மாணவர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இவ்விழிப்புணர்வு நிகழ்வு அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கும், பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்குமான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.






