மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் அரச திணைக்களங்களுக்கு இடையேயான குழு விளையாட்டு போட்டி நிறைவுநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் இந்த வருடம் 18 திணைக்களங்கள் பங்கு கொண்ட, இந்தப் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக சிறப்பாக நடைபெற்று, 09.09.2026 அன்று மதியம் 2:30 மணிக்கு இறுதிப் போட்டிகள் மிக சிறப்பாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இருந்து வாகன பவனியாக இந்த வெற்றி கிண்ணம் எடுத்துவரப்பட்டு ,மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டிகள் ,சிறப்பு போட்டிகள் ,அத்துடன் கண்கவர் நிகழ்வுகள் என பல நிகழ்வுகளுடன் நடைபெற்று சிறப்பாக முடிவடைந்தது.
இதிலே குறிப்பிடும்படியாக இதுவரை காலமும் பல வருடங்களாக நடைபெற்று வரும் இப் போட்டிகளில், இம்முறை வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மாவட்ட செயலக அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தினையும் இரண்டாம் இடத்தினை மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவு அணி பெற்றுக்கொண்டது.
மூன்றாம் இடத்தில் இரண்டு பிரதேச செயலக பிரிவுகள் நானாட்டான் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக அணி என்பன பெற்றுக் கொண்டிருந்தன.
மிக ஏராளமான போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என பலரும் ,இதிலே வெளிநாட்டு பார்வையாளர்கள் கூட பங்கு கொண்டிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.







