கூராய் கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வெள்ள அனர்த்த ஒத்திகைப் பயிற்சிக்கான மாவட்ட மட்ட கலந்துரையாடல் இன்று 05.10.2026 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, இலங்கை இராணுவத்தின் 541 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, இலங்கை கடற்படையின் முழங்காவில் கட்டளைத் தளபதி, இலங்கை விமானப்படையின் வவுனியா விமானப்படைத் தள கட்டளைத் தளபதி, இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம், தவிசாளர் – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மன்னார், மாவட்ட ஆணையாளர் – சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ், திட்ட அலுவலர் OPEnE, மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூராய் கிராமத்தில் நடைபெறவுள்ள வெள்ள ஒத்திகைப் பயிற்சியை வினைத்திறனுடன் முன்னெடுப்பது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, அவசரகால மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பான வெளியேற்றம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், ஒத்திகைப் பயிற்சியின் போது ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
 
koo Dis Meet1 Koo Dis Meet2