2026.10.16 ஆம் திகதியான இன்று, மன்னார் வாழ்வோதய அலுவலக உத்தியோகத்தர்களுக்கான காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு, மன்னார் வாழ்வோதய கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் வாழ்வோதய நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு.ரி.என். சூரியராஜா அவர்களால் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், எல் நினோ நிகழ்வினால் ஏற்படக்கூடிய காலநிலை மாறுபாடுகள், மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் அபாயங்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, பல்வேறு நிறுவனங்களின் செயற்பாடுகள், பொறுப்புகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கருத்தமர்வானது, அலுவலக உத்தியோகத்தர்களின் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், எதிர்கால அனர்த்தங்களைத் திறம்பட எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும் வலுப்படுத்தும் நோக்கில் முனெடுக்கப்பட்டது.






