மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் அனர்த்தக் குறைப்புத் திட்டத்தின் கீழ், OPEnE நிறுவனத்தின் அனுசரணையுடன், 2026.11.03 ஆம் திகதி மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவில், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவிற்கு அவசர பதிலிறுப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரி.என். சூரியராஜா அவர்களினால் இவ்வுபகரணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம சேவையாளர், OPEnE நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. ஜெயந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாட்டுத் திறனை வலுப்படுத்துதல், அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்துதல், அவசரநிலைகளின் போது விரைவாகவும் வினைத்திறனாகவும் பதிலளிக்கும் ஆற்றலை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் கிராம மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்தி, அனர்த்த அபாயங்களைக் குறைப்பதுடன், பாதுகாப்பான மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்பு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Dissaster Equipments Provided to periyamurippu20261 Dissaster Equipments Provided to periyamurippu20262 Dissaster Equipments Provided to periyamurippu20263
 
Dissaster Equipments Provided to periyamurippu20264