மன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 15ற்கும் மேற்பட்ட போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந் நிகழ்விற்குரிய அனுசரணைகளை, அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம்,ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேனீ - மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி அமைப்பு என்பனவும் மேற்கொண்டிருந்தன.























