மன்னார் மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாளி சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று (09-11) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டிலிருந்து பிரதேச செயலகங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் மணல் மற்றும் கனிம வளங்களை அகழ்வு செய்யும்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அபிவிருத்தித் திட்டங்களுக்கும் காணியற்ற மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை விடுவித்துக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் மணல் அகழ்வு செய்வதற்காக வழங்கப்பட்ட பெரும்பான்மையான அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியற்றதாக மாறியுள்ளமையினால், வறிய குடும்பங்களின் வீடமைப்பு நிர்மாணப் பணிகளுக்கு மணலைப் பெற்றுக்கொள்வதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.
மேலும், வனப்பாதுகாப்பு திணைக்கள நிலங்களிலிருந்து மண் மற்றும் கிராவல் (பரல் கற்கள்) பெற்றுக்கொள்வதில் நிலவும் தடைகள் காரணமாக, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த கிராமிய வீதிகள் மற்றும் கட்டிடங்களைப் புனரமைக்கும் பணிகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய, உரிய மேற்பார்வையின் கீழ் குறித்த காணிகளிலிருந்து மண், கிராவல் மற்றும் மணல் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பிரதி அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிரதி வனப்பாதுகாப்பாளர் பேராசிரியர் வசந்த லியனகே, மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் உள்ளிட்ட மன்னார் வனச்சரக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
01bjlp 02
மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை (11) காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் முசலி பிரதே சபைகளின் தவிசாளர்கள்,மாவட்டச் செயலக பதவி நிலை அதிகாரிகள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது குறிப்பாக அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பாகவும், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில் நிலவும் அதிகாரி மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வுகள் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் மன்னார் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் பிராந்திய மக்களின் சுகாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களை அதிகபட்ச பயனுள்ள முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு தேவையான வாகன வசதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கழிவு மேலாண்மை திட்டங்கள், சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து ஆராயப்பட்டது.
சிறுபோக சாகுபடியின் போது விவசாயத்துக்கு போதிய நீர் இல்லாத காரணத்தால், பயறு, சோளம் போன்ற மாற்றுப் பயிர் செய்கைகளில் கவனம் செலுத்துவது குறித்தும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு பயன்படுத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது போரினாலும் வறட்சியினாலும் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் அரசு தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்தார்.
 
01maer 02
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இம்முறை மன்னார் மாவட்டத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாம் கட்ட விசேட கலந்துரையாடல் இன்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்வரும் செப்டெம்பர் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உலக சுற்றுலா தின நிகழ்வுகளுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வுகளுக்கான பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள தரப்பினர், தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தமது திட்டங்களை முன்வைத்தனர்.
அத்துடன், நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களின் போக்குவரத்து, பாதுகாப்பு, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, நிகழ்வுகளை சிறப்பாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் பிரதேச ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், சுற்றுலாத்துறை பங்குதாரர்கள், வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உலக சுற்றுலா தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான முதலாவது கட்டக் கலந்துரையாடல் கடந்த 8ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டக் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
மேலும், நிகழ்வுகளுக்கான இறுதி ஏற்பாடுகளை ஆராயும் வகையில் மூன்றாம் கட்டக் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
 
01lsp 02
மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் அரச திணைக்களங்களுக்கு இடையேயான குழு விளையாட்டு போட்டி நிறைவுநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் இந்த வருடம் 18 திணைக்களங்கள் பங்கு கொண்ட, இந்தப் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக சிறப்பாக நடைபெற்று, 09.09.2026 அன்று மதியம் 2:30 மணிக்கு இறுதிப் போட்டிகள் மிக சிறப்பாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இருந்து வாகன பவனியாக இந்த வெற்றி கிண்ணம் எடுத்துவரப்பட்டு ,மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் இறுதிப்போட்டிகள் ,சிறப்பு போட்டிகள் ,அத்துடன் கண்கவர் நிகழ்வுகள் என பல நிகழ்வுகளுடன் நடைபெற்று சிறப்பாக முடிவடைந்தது.
இதிலே குறிப்பிடும்படியாக இதுவரை காலமும் பல வருடங்களாக நடைபெற்று வரும் இப் போட்டிகளில், இம்முறை வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மாவட்ட செயலக அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தினையும் இரண்டாம் இடத்தினை மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவு அணி பெற்றுக்கொண்டது.
மூன்றாம் இடத்தில் இரண்டு பிரதேச செயலக பிரிவுகள் நானாட்டான் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக அணி என்பன பெற்றுக் கொண்டிருந்தன.
மிக ஏராளமான போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என பலரும் ,இதிலே வெளிநாட்டு பார்வையாளர்கள் கூட பங்கு கொண்டிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.
 
01lpsq 02
 
03 04
 
05 06

காணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு அலுவலகத்தால் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம்தயாரித்தல் தொடர்பான இறுதி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் 01.09.2026 இன்று மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உதவிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாடு) அவர்களினால் இத்திட்டம் தொடர்பான விரிவான PowerPoint Presentation முன்வைக்கப் பட்டது. இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், குறைந்த பயன்பாடுடைய விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான பாவிக்கப்படாத நிலங்கள், காணிப் பயன்பாட்டு பிரச்சினைகள் காணப்படும் இடங்கள், மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கென சம்மந்தப்பட்ட திணைக்களங்களால் விடுவிக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள், வனவள மற்றும் வனவிலங்கு பரிபாலன திணைக்களம், நிலஅளவை திணைக்களம் , புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், நீர்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களங்களம் உள்ளிட்ட முக்கியமான பல திணைக்களங்களின் பங்குதாரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

01veuw 02 

03

சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம்: மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்தரையாடல்!
2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்தரையாடல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 20.08.2026 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இச் சிறுபோக அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும்,
மேலும், மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை வைத்திருக்கின்ற நிலையில், அவர்கள் அதனை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும்பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும்பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயற்திட்டத்தில் இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதிசெய்யும் பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகபட்சம் 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக 1,000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர்செய்தவர்களிடம் 2,500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர்செய்தவர்களிடம் 4,000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்படவுள்ள நிலையில்
நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவணைகளில் வழங்கப்படும்.
அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டிற்கு 10% வட்டி அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கக் கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்களும் கூட்டுறவுச் சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
01gjo 02
வவுனியா மாவட்டத்திற்கு இடமாற்றலாகிச் செல்லும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. கனகரெத்தினம் திலீபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த திரு. திலீபன் அவர்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளின் போது மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மன்னாரில் தனது பணியை ஆரம்பித்த அவர், வெள்ளம், கடும் மழை, புயல், வறட்சி உள்ளிட்ட அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை நேரடியாகக் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டார்.
அத்துடன், அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் அவசரகால செயற்பாடுகள் தொடர்பில் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சிறப்பான பணிகளை முன்னெடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தனது நீண்டகால சேவையின் மூலம் பல்வேறு தரப்பினருடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவரின் இடமாற்றம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களிடையே உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
பாராட்டு நிகழ்வின் போது, அவரது சேவையைப் பாராட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், புதிய பணியிடத்திலும் சிறப்பாகச் செயற்பட்டு அரச சேவைக்கு மேலும் பங்களிப்புகளை வழங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வவுனியா மாவட்டத்தில் அவர் பொறுப்பேற்கவுள்ள புதிய பதவியில் சிறப்பான பணிகளை முன்னெடுக்க மன்னார் மாவட்டச் செயலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது பதவிகளை உத்தியோபூர்வமாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
01csq 02
 
03 04
மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதையும், பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட கிரீடா சக்தி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஹலீம்தீன், கல்வி பிரதிப் பணிப்பாளர் திரு. ஞானராஜ், கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. பிர்காஷ், திரு. M. சஜித் மற்றும் DCC அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. ரைசுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், கிரீடா சக்தி திட்டத்தின் பயனாளிகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (PET), பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு DSDO திரு. M. R. M. ஜஸ்மின் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றதுடன், பயிற்றுநர் திரு. P. ஜூலிஸ் கிளிட்டாஸ் அவர்களின் ஆதரவும் வழங்கப்பட்டது.
கிரீடா சக்தி திட்டத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் அதன் மூலம் மாணவர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இவ்விழிப்புணர்வு நிகழ்வு அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கும், பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்குமான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
 
01agl 02
 
03 04
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் இன்று (14.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசாங்க அதிபர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டமும் இடம்பெற்றது. இதன்போது மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு, அரசாங்க அதிபர் அவர்களுக்கு தமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் சார்பாகவும், எமது அரசாங்க அதிபர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அவர் சிறந்த ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 
01nuo 02
 
03 04
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பணிப்பாளர் திரு. சூரியராஜா அவர்கள், இன்று (10) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்தம்வமைத்துவ உதவி பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
01vcl 02
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழாவும் நானிலம் பிரதேச மலர் வெளியீடும் இன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி தர்ஷினி நிதர்சன் சிறப்பு விருந்தினராகவும் , மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ நித்தியானந்தன் மற்றும் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்
விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமான இந்த விழாவி்ல் சிறப்பு கலைநிகழ்வுகள் ,நானிலம் சிறப்புமலர் வெளியீடு, கலைஞர் கெளரவிப்பு,கலை மன்றங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன
இந்த நிகழ்வில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர்களின் விபரம்
அந்தோனி றெமியிஜஸ் - இலக்கியத்துறை
மதிவதனி சுபாஜினன் - கூத்து துறை
லாசர் ஜேம்ஸ் லெம்பேட் - வார்த்தியதுறை
 
01soc 02
 
03 04
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் நகரம் பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு விழா இன்று மன்னார் நகர மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது
மன்னார் நகரம் பிரதேச செயலாளர் காந்திராசா காந்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் துறைசார் விருந்தினராக மன்னார் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ நித்தியானந்தனும், கலைசார் விருந்தினராக கலைக்குரிசில் எஸ் ஏ உதயனும் கலந்து கொண்டனர்
பாரம்பரிய முறைப்படி விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கலைநிகழ்வுகள்,கலைஞர் கெளரவிப்பு, கலை பண்பாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன
இந்த விழாவில் திருமதி அமல உற்பவி லீனஸ்( சிறுகதை)திருமதி ஸ்ரிபன் சிசில் பெனோ(இசை) திரு எமிலியான் ஸ்ரிபன் சுகந்தரூபன் கூஞ்ஞ (நாடகம்) , திருமதி மேரி நிருபா பஸ்ரியன் (ஓவியம்) ஆகியோர் கலைச்செம்மல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
 
01cgu 02
 
03 04
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்டாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மடு பிரதேச செயலகமும் பிரதேச பண்பாட்டுப்பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப்பெருவிழாவும் மடுக்கீற்று பிரதேச மலர் வெளியிடும் இன்று பெரியபண்டிவிரிச்சான் மரிய கொறற்றி தேவாலயத்தின் மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது
மடு பிரதேச செயலாளர் இ கி அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க,கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும்,சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்சனும் கெளரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட உத்தியோகத்தர் இ நித்தியானந்தன் மற்றும் மன்கலைச்சுரபி வாரித்தம்பி நவரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இவர்களுடன் பெரியபண்டிவிரிச்சான் பங்குத்தந்தை, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,பிரதேச கலைஞர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் ,பொதுமக்கள் எனப்பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
பாரம்பரிய முறைப்படியான வரவேற்பைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள், மடுக்கீற்று சிறப்பு நூல் வெளியீடு, கலைஞர் கெளரவம், கலைமன்றப்போட்டி பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன.
 
01lkd 02
 
03 04
அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று (27.07.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றது.
🌿 நிகழ்வின் சிறப்பம்சங்கள் 🌿
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரச சேவையில் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதற்கும், பொதுமக்களுக்கு திறமையானதும் நியாயமானதுமான சேவையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய நேர்மை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
🌿 தேசிய நேர்மை வாரம் – 2026 🌿
நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குதல், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேசிய நேர்மை வாரம் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களில் நேர்மைக் கலாசாரத்தை மேம்படுத்துதல், நிதி மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகளில் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், சமூக மற்றும் தார்மீக விழுமியங்களை மேம்படுத்துதல், சிறந்த சேவை வழங்கலை உறுதிப்படுத்துதல் மற்றும் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
01zvm
 
02
 
03 04
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22.07.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க . கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் ஆணையாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் தகவல் உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் திரு. ஜகத் லியனாராச்சி அவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகாரிகளின் கடமைகள், தகவல் கோரிக்கைகளை உரிய காலவரையறைக்குள் கையாளுதல், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் தகவல் வழங்கும் செயற்பாட்டில் அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்களை சட்டத்திற்கு அமைவாக கையாளுதல் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், அரச நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், தகவல் வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பொது அதிகாரிகளின் பொறுப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, அரச நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கிய பங்காற்றுவதாகவும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
 
01ghj 02
 
03 04
மன்னார் பாடசாலைகளில் மாணவர்களினை கல்வி கற்பிப்பதில் நெருக்கடியினை எதிர்நோக்ககின்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான துவிச் சக்கர வண்டி வழங்கும் வேலைத்திட்டம் 2026.07. 20ஆம் திகதி மாவட்டச் செயலாளர் திரு K.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையிலே இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி கற்கும் 25 பாடசாலை மாணவர்களுக்கு முத்து தம்பி தில்லை நடராசா குடும்பத்தினரின் (சுதுமலை, மானிப்பாய்)நிதி அனுசரணையின் கீழ் மாவட்ட செயலாளரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர்கள் தில்லை நடராசா குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் பயனாளி பிள்ளைகள் உட்பட அவர்களின் பெற்றோர்கள் சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விருப்பிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டியை வழங்கி வைத்தனர்.
 
01vjl 02
 
03 04
 
 
மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (17.07.2026) மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சமாதான நீதவான்களை ஒருங்கிணைத்து, அவர்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சமாதான நீதவான்களின் ஒற்றுமை, சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதன்போது மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் சம்மேளனத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், சம்மேளனத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தா நடைமுறைகள் தொடர்பிலும், சம்மேளனத்திற்கென தனியான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து பேணுவது தொடர்பிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்களுக்கான பணிப்பாளர் S.R. பெஸ்லிக்கா குலாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் மன்னார் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் மைக்கேல் ராஜ், அகில இலங்கை சமாதான நீதவான்களின் யாழ் மாவட்ட பணிப்பாளர் எம். ஆர் கிருபாகரன், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் தினோசன் மற்றும் மன்னார் மாவட்ட அகில இலங்கை சமாதான நீதவான்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
01fjl 02
 
03 04
இன்று (17.07.2026), மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட 17 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி, தங்களது அரசுப் பணிகளை நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுமாறு வாழ்த்துகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
01fjl 02
 
03 04
எதிர்வரும் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இன்று (15) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
எல் நினோ காலநிலை மாற்றம் விவசாயத் துறையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் வட மாகாண செயலாளர் எஸ். சிவஸ்ரீ, எல் நினோ தாக்கம் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்கவும், மாவட்ட வாரியாக பயிர்ச்செய்கைத் திட்டமிடலை மேற்கொள்ளவும் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
வட மாகாணத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து மாவட்டங்களின் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப செயற்திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் முதலாவது கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வறட்சி நிலை ஏற்பட்டால் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்குத் தேவையான நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், மழைநீரை சேமித்தல், குளங்களை அபிவிருத்தி செய்தல், குறைந்த நீரில் பயிரிடக்கூடிய முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.
வட மாகாணத்தின் பிரதான விவசாயமான பெரும்போக நெல் உற்பத்தியை வெற்றிகரமாக முன்னெடுத்து, அதிக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப், மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு, விவசாயத் திணைக்கள அதிகாரிகள், ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
01vgy 02
 
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்களைச் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையில் வருடாந்திரமாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான (Season 05) கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 11.07.2026 அன்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மன்னார் மாவட்ட அணி, இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
இந்நிலையில், வெற்றியைப் பெற்ற மன்னார் மாவட்ட அணியினருக்கு இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளரின் தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது, வெற்றியைப் பெற்ற வீரர்களுக்கு மாவட்டச் செயலாளர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன், எதிர்கால போட்டிகளிலும் இதேபோன்ற அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு வெற்றியாளர்களை பாராட்டி கௌரவித்தனர்.
 
01lok 02jpg
 
03 04
CHAMPIONS - MANNAR DISTRICT
வடமாகணத்தின் 5 மாவட்டங்களின், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையிலான கிரிகட் சுற்றுப்போட்டியானது ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவடத்தில் நடைபெறும்.
அந்தவகையில் இவ்வருடத்திற்கான கிரிகட் போட்டியானது 11.07.2026 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முதல் சுற்றில் 5 அணிகளும் லீக் முறையில் விளையாடி முதலிரு இடங்களை பிடித்த மன்னார் மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியினரும் இறுதிப்போட்டியில் விளையாடினர்.
இறுதி பந்துபரிமாற்றம் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மன்னார் மாவட்ட அணியினர் வெற்றி பெற்று தொடர்ச்சியாக நான்காவது வருடமாக கிண்ணத்தினை சுவிகரித்துக்கொண்டனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணிகளும் லீக் சுற்றுப்போட்டியில் ஒரு போட்டியையேனும் வெற்றி பெற்றிருந்தனர். அந்த வகையில் அனைவரும் வெற்றியாளர்களே.
சிறந்த முறையில் போட்டிகளை ஒழுங்கமைத்த வவுனியா மாவட்ட செயலகத்தினர் அனைவருக்கும், மனமார்ந்த நன்றிகள்.
 
01pfa 02
 
03 04
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகள்
மாவட்ட செயலாளர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில்...
- அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு
- யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகள்
- தரமான அரச சேவைக்காக அரச துறையில் விரிவான மறுசீரமைப்பு
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில், அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பொதுச் சேவைகளை மிகவும் செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்று மாவட்ட மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கங்களாகும்.
அதேபோன்று, மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்மொழிதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைத்தல் ஆகியன இங்கு மேற்கொள்ளப்பட்டன.
மக்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக, அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கு அனுமதிக்காதிருக்கவும், அத்தகைய பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான அனுமதியை வழங்காதிருக்கவும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
மத்திய மலைநாட்டின் முக்கியத்துவம் மிக்க நிலப்பரப்புகளை முகாமைத்துவம் செய்வதற்காக விசேட அதிகாரங்களைக் கொண்ட அதிகாரசபையொன்றை நிறுவும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் புதிய அதிகாரசபையின் பணிகளைத் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை அடுத்த வருடத்தில் மீள்குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளுக்கு உள்ளாகும் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான வீடுகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பல்வேறு காரணங்களினாலும் அரசியல் தேவைகளினாலும் முறையற்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்திய ஜனாதிபதி, இது குறித்து விரைவான கணக்கெடுப்பொன்றை நடத்தி, மக்களுக்குத் தேவையான திட்டங்களை மாத்திரம் இனங்கண்டு, அவ்வீடுகளின் பணிகளை நிறைவு செய்வதற்காக வீட்டு உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, வீடுகள் மற்றும் ஏனைய கட்டுமானங்களின் போது முறையான திட்டமொன்றின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற கட்டுமானங்கள் காரணமாகப் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கட்டுமானங்களை முறையான திட்டமொன்றின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தேவையைக் கருத்திற்கொண்டு, இராணுவ முகாம்களின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் அதேவேளை, ஏனைய விசாலமான காணிகளை முதலீடுகளுக்காக வழங்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகக் காணிகளை வழங்கும்போது வனவள மற்றும் வனஜீவராசிகள் வலயங்கள் பாதுகாப்படைவதை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
தரமான அரச சேவையொன்றிற்காக அரச துறையில் விரிவான மறுசீரமைப்பின் அவசியத்தை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அரச சேவையின் செயல்திறனை அதிகரிப்பதற்காக செயற்திறனற்ற நிறுவனங்களை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ள இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாகும் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
01qyp 02
 
03 04
 
மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் – 2026 விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (07) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்க நிகழ்வாக மன்னார் மாவட்டச் செயலகம், நானாட்டான் பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பீட் நிஜாகரன், மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காய்வாளர், அனர்த்த முகாமைத்துவ உதவி மாவட்டப் பணிப்பாளர் கே. திலீபன், மனோன்மணி அறக்கட்டளை நிதியத்தின் பொருளாளர் ஜே. அன்ரனி, அந்நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் கிஷோர், வைத்திய கலாநிதி ஒஸ்மன் டெனி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்யானந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஜே.எஸ்.பி. லெம்பேட், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம். ஜெஸ்மின், மாவட்ட வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் எஸ். ரெக்ஸ் அருள்நேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகளின் பிரதான அனுசரணையை மனோன்மணி அறக்கட்டளை நிதியம் வழங்கியுள்ளது. அதற்கான அனுசரணைக் காசோலையை அறக்கட்டளையின் பொருளாளர் ஜே. அன்ரனி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரனிடம் நிகழ்வின் போது கையளித்தார்.
மாவட்ட அரச நிறுவனங்களுக்கிடையே ஒற்றுமை, விளையாட்டுணர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கில் இவ்விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
01bgt 04
 
03 022
மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான விலை நிர்ணயக் கூட்டமானது மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று(25) இடம்பெற்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய பல்வேறு காரணிகள் தொடர்பாகவும் துறைசார் அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டமைக்கு அமைவாக பல்வேறு பொருட்கள் , சேவைகளுக்கான விலைகள் இக்கலந்துரையாடல் மூலமாக மீள் நிர்ணயம் செய்யப்பட்டன.
இதன்போது, மணலுக்கான நிர்ணய விலைகளும் மாற்றியமைக்கப்பட்டன.
இதற்கமைய, மணல் யார்ட் (மணல் ஸ்டோர்) உள்ள இடங்களில் மணலைப் பெற்றுக் கொள்ளும் போது, அதற்குரிய விலையாக 3 கியூப் (3 Cube) உள்ள டிப்பர் வாகனத்திற்கு 39,250 ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அது ரூபா 43000 ஆகவும், ஏனைய பிரதேசங்களில் 51,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் தற்போது ரூபா 57000 இற்கும் எதிர்வரும் காலங்களில் விற்பனை செய்யப்படுமென புதிய விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றங்களுக்கேற்ப இந்த நிர்ணய விலைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
01qlp 02
 
03 04
விளையாட்டுத் துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால், நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் திட்டத்தினூடாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை மன். புனித / லூசியா மகாவித்தியாலயத்திற்கு முதற் தொகுதி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் குறித்த பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு M.R.M ஜஸ்மின் அவர்களது ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கௌரவ. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், மன்னார் வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.பிறேம், விளையாட்டு அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்புச் செயலாளர் திரு.M. சாஜித் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
 
01lod 02
 
03 04
மன்னார் மாவட்ட செயலக, மனித வலு வேலைவாய்ப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் "மாவட்ட தொழிற்சந்தையும்", மாவட்ட விதாதா பிரிவினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்டத்திலுள்ள உள்ளூர் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான "வர்த்தக சந்தையும் விற்பனைக் கண்காட்சியும்" இன்று மன்னார் நகர மத்திய சுற்றுவட்டத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை மன்னார் மாவட்டச் செயலாளர் திரு. க.கனகேஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), மன்னார் பிரதேச செயலாளர், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள், மாவட்ட செயலக அலுவலகர்கள், தொழில் வழங்குனர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
 
01pak 02
 
03 04
எதிர்வரும்16ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய எறிபந்து மோட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையினுடைய தேசிய அணியில இடம் பிடித்த்துள்ள மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தியாலய நான்கு மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரியின் கோரிக்கைக்கமைய மனோன்மணி பவுண்டேஷன் ஸ்தாபகர் திரு. சவேரியான் அகஸ்டின் அவர்களால் மாவட்ட செயலாளர் ஊடாக குறித்த 4 லட்சம் ரூபா பணம் மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட செயலாளர் , மேலதிக மாவட்ட செயலாளர், மாவட்ட விளையாட்டு அதிகாரி, மனோன்மணி பவுண்டேஷன் பொருளாளர் அன்ரனி, இயக்குனர் சபை உறுப்பினர் பற்றிக், பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு ஞானராஜ், அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர், மற்றும் வீரர்களுடைய பெற்றோர்களும் பாடசாலை பழைய மாணவர்களும் கொண்டிருந்தார்கள்.
 
01lad
 
2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்டத்திலான வீதி நாடகப்போட்டியானது இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த இப்போட்டியில்,
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 'கலையருவி கலாமன்றம் ' அணியினர் முதலிடத்தினையும், மாந்தை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 'மாந்தை மேற்கு கலை கலாசார மன்றம்' அணியினர் இரண்டாம் இடத்தினையும், மடு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 'கலைமகள் கலாமன்றம்' அணியினர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டிக்கு மன்னார் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் பல அலுவலகர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
 
01mht 02
 
03 04
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று புதன்(10) மாலை 2.30 மணியளவில் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடா வருடம் மடு அன்னையின் ஆடி திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.
இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்து அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம்,போக்குவரத்து,மருத்துவ வசதிகள் ,நீர் விநியோகம் ,உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் குரு முதல்வர் அருட்தந்தை ,மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை, காவல்துறையினர் ,கடற்படை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
 
01vts

01melp  02  03 

 

04 05 06

08

 

 

 

மன்னார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை விலையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09.06) செவ்வாய்க்கிழமை நண்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டம் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கும் பிரதேசமாக இருப்பதுடன், அப்பகுதி மக்கள் மாட்டிறைச்சியை அதிகம் விரும்பி பயன்படுத்தி வருவதையும் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மாட்டிறைச்சி விற்பனை விலைகளை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 2,200 ரூபாவிற்கும், 800 கிராம் இறைச்சியுடன் 200 கிராம் எலும்பு சேர்த்த ஒரு கிலோ இறைச்சி 2,000 ரூபாவிற்கும், தனி முள்ளு இறைச்சி 1200 ரூபாவிற்கும், ஒரு கிலோ ஈரல் 2,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், தீர்மானிக்கப்பட்டதுடன்,
நுகர்வோர் இறைச்சியின் எடையை பார்க்கும் அளவிற்கு தராசுகள் பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதோடு விலைப்பட்டியலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விலை நிர்ணயம் தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்,
"மன்னார் மாவட்டத்திலேயே மாட்டிறைச்சி என்பது ஒரு முக்கியமான உணவாகக் காணப்படுகிறது. எனவே இன்றைய தினம் இந்த விசேட கூட்டமானது அனைத்து பங்குதாரர்களுடனும் நடாத்தப்பட்டது.
அத்தோடு நேற்றைய தினம் பண்ணையாளர்களுடன் ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதிலே மக்களுக்கு நியாய விலையில் இறைச்சியை வழங்கும் பொருட்டு
மாடுகளை இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்று
1700 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு 02.06.2026 அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இன்றைய தினமும் குறிப்பிட்ட விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது .என்று தெரிவித்தார்.
மேலும் ,அந்த விலைகளுக்கு அமைவாகவே மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்
அத்துடன் இந்த விலையானது விலை பாதுகாப்பு அதிகாரிகளினால் கடுமையாக பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இறைச்சியின் விலையை நியாயமாகப் பேணும் வகையில்
எதிர்வரும் நவம்பர் மாதம் வரை
மாடுகளை இறைச்சிக்காக மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்குத் தடை விதிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
எனவே எட்டப்பட்ட இந்த தீர்மானங்களை செயல்படுத்தும் பொருட்டு பொதுச் சுகாதார அதிகாரிகள் கால்நடை வைத்தியர்கள் போன்றவர்களின் சேவைகளில் ஏற்படுகின்ற தாமதங்களை நிவர்த்திப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், நகர சபைத் தலைவர், மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர், ,கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட பொது சுகாதார அதிகாரிகள், இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
 
01bdw 02
 
03 04
 
மன்னார் மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழு கலந்துரையாடனது கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் திரு எம் .ஜெகதிஸ்வரன் அவர்களது பங்குபற்றலுடன் இணைத்
தலைவர்களாகிய மன்னார்மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறி ஆகியோரது தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது விவசாயம்,கடற்றொழில், கால்நடை உற்பத்தி ஊடாக உணவு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் அதனை ஊக்குவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
 
01bdw 02 
 
03 04
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட விளையாட்டு விழா – 2026 நிகழ்வு நேற்று (07.06) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மன்னார் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்விளையாட்டு விழாவில் தடகள மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் ஓட்டப் போட்டி உதைப்பந்தாட்டம் போன்ற பல்வேறு
விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.
இவ்விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள பாடசாலைகளை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நடைபெற்று முடிந்த பெருவிளையாட்டுகள் மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், முதலாம் இடத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவு அணியும், இரண்டாம் இடத்தினை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு அணியும், மூன்றாம் இடத்தினை
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு அணியும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் பணப்பரிசில்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விளையாட்டு துறையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் மூன்று விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரினால் பொன்னாடைகள் போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிப்பதோடு, மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்
வட மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர் பி. முகுந்தன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக, பிரதேச செயலாளர்கள், பிரதி கல்விப் பணிப்பாளர் உதவிக் கல்வி பணிப்பாளர், மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
01m9gq 01
0203
 
 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை நிகழ்வு – 05 ஜூன் 2026
பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் அனுசரணையுடன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பில், மாவட்ட செயலகம், மன்னார் பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பில் மாவட்ட செயலாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, மன்னார் மாவட்டத்தில் 500 கண்டல் தாவரங்களை நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, டினோசா கண்டல் தாவர வளர்ப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கடலோர சூழலியல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும், உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவதிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தணிப்பதிலும் கண்டல் தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வின் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வு வலுப்படுத்தப்பட்டதுடன், எதிர்கால சந்ததியினருக்கான ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
 
01qtp 02
 
03 04
 
மன்னார் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 301 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு; இராணுவத்தின் 54 படைப் பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் குடும்ப நல பணியகத்தில் இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாதுகாப்பு படையணி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலதுங்க அவர்களும், அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், இராணுவத்தின் 54 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.எம்.என். பெரேரா, ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா, பிரதேச செயலாளர்கள், மன்னார் நகர சபையின் தவிசாளர் கௌரவ. டானியல் வசந்தன்,
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மனித உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பு, சர்வமத தலைவர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 
016ki 02
 
03 04
'ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஐந்து பிரதான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு அங்கமாக, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் பனைசார் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக புதிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் ம. காந்தீபன், மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலீம்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் ரொகான், மன்னார் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜூட் மைக்கேல்ராஜ், கிளீன் ஸ்ரீலங்கா திட்ட உத்தியோகத்தர் மொஹமட் சாஜித், தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் அத்தீக் மற்றும் தலைமன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளர், பிரஜாசக்தி அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
 
01m2k 03
 
04 05
 
 
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் உற்பத்தித் திறன்சார் அறிவினை மேம்படுத்தல் மற்றும் பரிசோதித்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அரையாண்டு ரீதியில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 2025 இரண்டாம் அரையாண்டுக்கான வெற்றியாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வெற்றியாளர்கள்
C.M. பெர்னாண்டோ - தாபனக்கிளை
M. மாலினி - கொள்ளல் பிரிவு
S. சரணியா - புள்ளிவிபரக்கிளை
A.S நிர்மலா - கொள்ளல் பிரிவு
J.R.C லம்பேட்- மனிதவள அபிவிருத்தி பிரிவு
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபரும், உற்பத்தித்திறன் அதிகாரியுமான திரு M. பிரதீப் அவர்களும் கலந்துகொண்டார்.
 
01nwl 02
 
03 04

மன்னார் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவானது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் இன்று கொண்டாடப்பட்டது.

01  001  02  03  04  05  07

மன்னாரில் உல்லாச பயண துறை விருத்தியின் ஓர் அங்கமாக ஆதாம் பனைமர உல்லாச விடுதி ADAM'S PALM RESORT கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில் அமைச்சர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

01pxt 02 

03 04

மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோர பிரதேசங்களில் இராணுவத்தின் ஏற்பாட்டில் 'அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள்' எனும் கருப்பொருளில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

   

  01vq1  02 

03 04

  

சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.
எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி (2026.06.02) இடம்பெறவுள்ள மன்னார் சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடலானது மன்னார் ஆயரின் கோரிக்கைக்கமைவாக, மறைமாவட்ட குருமுதல்வர் வண.அருட்பணி P. கிறிஸ்துநேசரெட்னம் அவர்களது ஒழுங்கமைப்பில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க. கனகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த இக்கலந்துரையாடலில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் (பதில்) திரு கா.காந்தீபன், உதவி பிரதேச செயலாளர் திரு.ச.டிலக்சன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ.ஞா.பிறேம்குமார் , சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய பரிபாலகர் வண.அருட்பணி அருட்பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி, காலை 6.00, 7.30, 10.30, மாலை 3.00 மணி என வெவ்வேறு நான்கு நேரங்களில் திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.
குறித்த நாளில் , பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், நீர் வசதிகள், மேலும் ஏனைய அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியில் மதுபானப்பாவனை மற்றும் விற்பனை விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பான இறுக்கமான தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டன.
 
01xdr 02
 
03 04
மன்னாரில் இன்று சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது
மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மன்னார் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சட்டத்தரணிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறையினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு சேவைகளை வழங்கினர்.
காணி பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள், ஆவணச் சிக்கல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, நிர்வாக மற்றும் குடிமக்கள் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையான சட்ட உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு நீதியமைச்சின் அனுசரணையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன், UNICEF, UNDP, JURE திட்டம் மற்றும் சர்வோதயா அமைப்புகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
 
01bnm 02
 
03 04
நீதி அமைச்சின் ஒழுங்கமைப்பில் UNDP மற்றும் சர்வோதயம் நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் எதிர்வரும் 2026.05.27 அன்று நடைபெற உள்ளது.
இச்சட்ட உதவி முகாமில் பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.
 
01

மன்னார் மாவட்ட பதிவாளர் பிரிவுக்குட்பட்ட வங்காலை, தலைமன்னார், மாந்தை தெற்கு மற்றும் மன்னார் நகரம் மேற்கு கிராமிய பிரிவுகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட நபர்களுக்கான நியமன கடிதங்களை மன்னார் மாவட்ட செயலாளர் அவர்கள் வழங்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக காணி பதிவாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

 

01jkop 03

    04

மன்னார் மாவட்ட 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் (ஏப்ரல் 29 இடம்பெற்ற கூட்டத்தின் இரண்டாம் பகுதி) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (12) செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் ,கடற்படை அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
 
01bwa 02
 
04 05

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்துச் சிறுவர் இல்லங்களுக்கு வருடா வருடம் வழங்குகின்ற நிதியுதவித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இயங்குகின்ற இரண்டு சிறுவர் இல்லங்களுக்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள், மற்றும் பிரதேச செயலாளரின் பங்குபற்றலுடன் காசோலை உரிய நிர்வாகிகளிடம் 05.05.2026 ஆந் திகதியன்று கையளிக்கப்பட்டதன் பதிவுகள்

01znt

 02

மன்னார் மாவட்ட 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (29) புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் மற்றும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், ரவிகரன்,செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் ,கடற்படை அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாட பட வேண்டிய பல்வேறு விடயங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
 
01 02 03
 
04
 
 
 
மன்னார் மாவட்ட சிறுவர்கள், பெண்கள் அபிவிருத்தி, SGBV, உளசமூக மற்றும் போதை தடுப்பு குழு மன்ற முதலாம் காலாண்டு ஒன்றுகூடல் நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் போதை பொருட்கள் ஊடக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும் கட்டாய கல்வி தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் இடம்பெறும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார துறை அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
01 02 03 06
 
04
 
 
மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்குப் பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18.04.2026) சனிக்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
 
02 01 03 04
2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான ஊராட்சி முற்ற கலந்துரையாடலானது 10.04.2026 அன்று மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கலந்துரையாடல் நிகழ்வினை மன்னர் மாவட்ட செயலாளர் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோர் இணை தலைமையேற்று நடத்தி இருந்தனர்.
இந்த ஊராட்சி முற்றக் கலந்துரையாடலிலே பின்வரும் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது மன்னார் பிரதேசத்தில் பாவனை செய்யப்படாமல் இருக்கின்ற பொது மற்றும் தனியார் கட்டிடங்களிலே தவறான நடத்தைகள் இடம் பெறுவதாகவும் இவற்றை குறைப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை அரசு தரப்புகள் உருவாக்கித் தர வேண்டும் எனவும்
அதே நேரத்திலே கடந்த காலங்களிலே வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களை நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றன அவற்றை நிறைவு செய்வதற்கு அரசாங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது அதை போன்று முறையான வடிகால் அமைப்பு பராமரிப்பு இல்லாமையினால் கட்டுகரை குளத்திற்கு கீழ் உள்ள கிராமங்கள் நீர் பெருக்கெடுக்கும் காலங்களில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது இவற்றிற்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும் மேலும் காணிகள் தொடர்பான பிரச்சனையும் கலந்த ஆலோசிக்க பட்டு உரிய தீர்வுகள் துறை சார்ந்த திணைக்களங்களினாலே வழங்கப்பட்டிருந்தது.
மேலதிக அரச அதிபர் காணி மற்றும் நிர்வாகம், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலுக்கு கிரிசலிஸ் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய நிதி பங்களிப்பின் பிரிட்ஜ் திட்டத்தினூடாக இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கப்பட்டு இருந்தது .
 
01zoe 02
 
03 04
மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று மாலை 2.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதேவேளை, மாவட்ட விவசாயப் பிரிவின் தற்போதைய செயற்பாடுகள், விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் நீர்வழங்கல் நிலைமை தொடர்பாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதனுடன், மாகாண விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், நெல் ஆராய்ச்சி பிரிவு, விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் விநியோகம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
கால்நடை அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பயிர் காப்புறுதி தொடர்பான சேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறுதியாக, ஏனைய முக்கிய விடயங்களும் எடுத்துரைக்கப்பட்டு, மாவட்டத்தின் விவசாய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பயனுள்ள கருத்துகள் பகிரப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,பதவிநிலை உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயப் பிரிவின் உத்தியோகத்தர்கள், விவசாய சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 
 01  2  03  
 
04

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 22 விசேட காணி மத்தியஸ்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வானது இன்று 2026.04.08 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மத்தியஸ்த பயிற்சி அதிகாரியான திரு செ. விமலராஜா அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்டச் செயலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

001  01   02

03  04  05

 

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. “செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது. இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே “சுரகிமு லங்கா” திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும். எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

covwe tamil 

                                      அதிக மின்சாரத்தை நுகரும் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்போம்
                             சிக்கனத்துடன் தொடங்குவோம் - ஒளிமயமான எதிர்காலத்தைப் படைப்போம்

 

                         WhatsApp Image 2026 04 04 at 8.43.28 AM    WhatsApp Image 2026 04 04 at 8.43.29 AM 

வாரத்திற்கு ஒரு முறை அயன் செய்வோம் - மின்சாரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவோம்! 🔌💰
வீணாகும் மின்சாரத்தைக் குறைத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம். 🇱🇰 ✨
 

                         WhatsApp Image 2026 04 04 at 8.43.29 AM 1  WhatsApp Image 2026 04 04 at 8.43.30 AM 

 

                         WhatsApp Image 2026 04 04 at 8.43.30 AM 1  WhatsApp Image 2026 04 04 at 8.43.31 AM

 

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் உபாலி அமரசிங்க அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை கையாள்வது தொடர்பான கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் அவர்கள் வழிநடத்தலில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையர், மீன்பிடி மற்றும் நீரியல் வளம் துறை உதவி பணிப்பாளர், சுகாதார துறை அதிகாரிகள், எரிபொருள் விநியோக உரிமையாளர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
001 002 003
 
004 005
“Clean Sri Lanka” தேசிய திட்டத்துடன் இணைந்து “தேசத்தை கட்டி எழுப்பும் வளமான கிராமம்” மாவட்ட மட்ட சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் தொடக்க வைபவம் இன்று (16.03.2026) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மன்னார் பிரதேச செயலகப் பிரிவின் சிறுத்தோப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட உதயபுரம் கிராமத்தின் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை கௌரவ தவிசாளர் அவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மத தலைவர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
01vbn 02
 
03 04
 
 
மன்னார் மாவட்டத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் வழிநடத்தலில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு குறித்து ஆராயப்பட்டது.
 
01let 02
03 04
மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் வழிநடத்தலில் இன்று மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
விளையாட்டு துறையில் வீர வீராங்கனைகள் ஈடுபடுவதை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை பாடசாலை மற்றும் கழகங்கள் மட்டத்தில் ஊக்குவிக்கும் வகையில் வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச தரத்திலான நவீன மயமான பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தற்போதைய அரசு முழுமையாக செயற்படுகிறது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், மன்னார் நகர சபை பிரதேச சபை தவிசாளர்கள், கல்வி சார்ந்த விளையாட்டு அலுவலர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் விளையாட்டு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
 
01klo 02
 
03 04
International Needs Lanka நிறுவனத்தின் நீர்வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளங்கோட்டை குளத்தினை புனர் நிர்மாணம் செய்து வி வசாய மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான எண்ணக்கரு திட்டத்தின் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையர், International Needs Lanka நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் பங்கேற்றனர்.
 
01ghj 02
 
03 04
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் முகாமைத்துவத்தை ஒழுங்கு முறை படுத்தும் அவசர கூட்டம் மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், கூட்டுறவு அபிவிருத்தி சங்க உதவி ஆணையர், கடற்தொழில் மற்றும் மீன்பிடி நீர் வளங்கள் உதவி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையர், MPCS பொது முகாமையாளர் மன்னார், எரிபொருள் வழங்குநர் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பொது மக்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் குறிப்பாக விவசாயம் மற்றும் மீன்பிடியில் எரிபொருள் பாவனை தொடர்பான கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
 
01nkl 02
 
03 04
ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான பிரதி தூதுவர் அவர்கள் மாவட்ட செயலாளர் அவர்களினை சந்தித்து உலகவங்கி அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கரையோரத்துக்கு அப்பால் கடற்பிராந்தியத்தில் காற்றாலை அமைத்தல் தொடர்பாக சாத்தியவள ஆய்வு தொடர்பாக மக்களின் கருத்து தொடர்பாக கலந்துரையாடினார் . மேலும் மன்னார் தீவுப் பகுதியில் ஏற்கனவே அமைக்கப் பெற்ற காற்றாலை தொடர்பாக மக்களின் கருத்துக்கள் தொடா்பாகவும் கலந்துரையாடினார். மேலும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
 
01 02 03
பாடசாலை மாணவர்களுக்கான பொது போக்குவரத்து சேவைகளுக்கான மானியம் வழங்கும் திட்டம்.
மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான பொது போக்குவரத்து திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இன் நிகழ்வானது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் தலைமையில் இடம்பெற்றது மேலும் இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ( கௌரவ ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ அடைக்கலநாதன்), மன்னார் மாவட்ட செயலாளர், வட மாகாண வீதிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள், NTC போக்குவரத்து ஆணைக்குழு செயலாளர் மற்றும் அலுவலர்கள், கல்வி பணிப்பாளர்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் விடைகள் தொடர்பான அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும், பொது போக்குவரத்து கால அட்டவணை மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விசேட கவனம் செலுத்தப்பட்டது.
 
01fbj 02
 
03 04
நானாட்டான் பிரதேச செயலகத்தில் காணி பிணக்குகள் தொடர்பான பகுதி நாட்கூட்டம்!
நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அரச காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூடம் 2026-02-20 இன்று மாகாண காணி ஆணையாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
அரச காணி உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆவணச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நானாட்டான் பிரதேச செயலக செயலாளர், தொடர்புடைய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்
01jkl 02
 
03 04
நானாட்டான் பிரதேச செயலகத்தில் காணி பிணக்குகள் தொடர்பான பகுதி நாட்கூட்டம்!
நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அரச காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூடம் 2026-02-20 இன்று மாகாண காணி ஆணையாளர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
அரச காணி உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆவணச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நானாட்டான் பிரதேச செயலக செயலாளர், தொடர்புடைய துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்
01jkl 02
 
03 04
சிப்பியாறு புனித அந்தோனியார் யாத்திரிகர் ஸ்தலத்தின் இரண்டாம் கட்ட குழு கூட்டம்
மன்னார் மாவட்ட,மாந்தை பிரதேச செயலப் பிரிவிற்கு உட்பட்ட சிப்பியாறு புனித அந்தோனியார் யாத்திரிகர் ஸ்தலத்தின் இரண்டாம் கட்ட குழு கூட்டம் 17/ 2/ 2026அன்று காலை 9:30மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் காணி , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மறை மாவட்ட குருமுதல்வர், உதவி மாவட்ட செயலாளர், ஆலயத்தின் பரிபாலகர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பல திணைக்கள தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இவ்வாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் யாத்ரிகரின் நலன் கருதி ஒழுங்குபடுத்தல் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக கலந்துரையாடலும் கள விஜயமும் நடைபெற்றது.
 
01sht 02
 
03 04
மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகர பிரதேசத்தில் காணி பிணக்குகள் தொடர்பான பகுதி நாட்கூட்டம்!
மாந்தை மேற்கு மற்றும் மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் காணி பிணக்குகள் தொடர்பாக விசேட பகுதி நாட்கூடம் 2026-02-13 இன்று மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காணி உரிமை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஆவணச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் வடமாகாண காணி ஆணையாளர் நாயகம், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாந்தை மேற்கு பிரதேச செயலக செயலாளர், மன்னார் நகர பிரதேச செயலாளர் தொடர்புடைய துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
 
01py 02
 
03 04
 
 
 
 
 
 
முசலி மற்றும் நானாட்டான் கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தின் முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட கடல் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், இன்றைய தினம் (12) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர், IUCN நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர், SLRC நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களங்களின் உதவி பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
01mui 02
 
03 04
 
 
 இலங்கை வங்கியினால் ATM தன்னியக்க இயந்திரம் திறந்துவைப்பு
 
மன்னார் பள்ளமடு , விடத்தல்தீவு மற்றும் முசலி பிரதேச செயலக மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது.
மன்னார் இலங்கை வங்கியினால் மக்களுக்காக ATM தன்னியக்க இயந்திரம் திறந்துவைக்கப்பட்டது. இது குறித்த பிரதேச மக்களின் நீண்ட நாள் ஆசை
என்பதுடன் அவர்கள் பணத்தேவையின்  பொருட்டு நீண்ட தூரம் பயணம் செய்யும் அலைச்சலும் குறைவடையும் என மக்கள் மகிழ்ச்சி.
 
  002  003
 
005  006  007  
 
004
உற்பத்தி அதிகரிப்பே நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு மன்னாரில் மேலதிக அரசாங்க அதிபர் எம். பிரதீப்
நாட்டில் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.அவ்வாறில்லாமல் உற்பத்தி துறையை நாம் மேம்படுத்த வேண்டும் அதனால் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை எட்ட முடியும்.என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மேட்டு நில பயிர் செய்கை யாளர்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 06 வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
யு என் டி பி நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாயிகளுக்கு தலா 140,000 பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நிலவுகின்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது பொருளாதாரம் மேம்பட வேண்டும். தனியே அரச நிறுவனங்களை அல்லது சேவை வழங்கும் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதல்லாமல் எங்களுடைய நாடு ஒரு விவசாய நாடு என்ற வகையில் விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும்.
நாட்டில் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அவ்வாறில்லாமல் உற்பத்தி துறையை நாம் மேம்படுத்த வேண்டும் அதனால் தான் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை எட்ட முடியும்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெருநிலப்பரப்பில் மாத்திரமில்லாமல் தீவுக்குள்ளும் தற்போது விவசாயிகள் பயிர் செய்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு UNDP மற்றும் MARR போன்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் UNDP நிறுவனத்தினால் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் .
குறித்த நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் எம் பிரதீப், திட்டமிடல் பணிப்பாளர் எச்.ஹலிம் தீன், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் MARR தலைவர் அருட்பணி ரி. நவரட்ணம், செயலாளர் ராதா பெனான்டோ UNDP MARR நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர் சிங்ளேயர் பீற்றர் வெளிக்கள உத்தியோகத்தர் ராஜ் குரூஸ், மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.
 
0001 002 003
 
004 005
சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் 2025 மன்னார் மாவட்டச் செயலகம் முதன்முறையாக பங்குபற்றி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது
இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் Association of Public Finance Accountants of Sri Lanka APFASL மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா இன்றய தினம் 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH சிறிமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
பொது துறை நிறுவனங்களில் நிதி வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு மற்றும் சிறந்த கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருட விழாவில் மன்னார் மாவட்டச் செயலகம் தனது வரலாற்றில் முதன்முறையாக விருதை பெற்றுக்கொண்டது. இது மாவட்டச் செயலகத்தின் நிதி ஒழுங்கு தரமான வருடாந்த அறிக்கை தயாரிப்பு மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான உறுதியை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்.
இவ்விழாவில் பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் கௌரவ. நிஷாந்த ஜயவீர அவர்கள் பிரதம
விருந்தினராகவும் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் திரு. அலோக பண்டார அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். பொது துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மன்னார் மாவட்டச் செயலகம் பெற்றுள்ள இவ்வெற்றி, அனைத்து அலுவலர்களின் ஒற்றுமையான முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டு அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும்.
 
first 1 01 tit 03 04
மன்னார் மாவட்ட செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
மன்னார் மாவட்ட செயலகத்தில் 78ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (2026.02.04) மாவட்ட செயலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் நாட்டின் சுதந்திரத்தின் பெறுமதி, ஒற்றுமை, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பொறுப்புணர்வு குறித்து வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரநடுகை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஏனைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 
01li  02 03
 
05 06  07
 
 
மன்னார் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் போது சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பணிச்சூழல் தொடர்பான விடயங்கள், சேவை நடவடிக்கைகளில் காணப்படும் சவால்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், குறித்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சில முக்கிய தீர்மானங்களும் இச்சந்திப்பில் எடுக்கப்பட்டது.
அத்துடன், இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
 Samr1 Samr2 Samr3
 
 
Samr4 Samr5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மன்னார் மாவட்டத்தில் நெற்பயிற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் கவனத்திற்கு...
எமது மாவட்டத்தில் தற்போது அறுவடைக்காலம் ஆரம்பித்திருப்பதால் ஆட்காட்டி வெளியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையினால் ஒரு விவசாயியிடமிருந்து 2500 கிலோ கிராம் எனும் அடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்காக,
1kg நாடு 120 ரூபாய்
1kg சம்பா 130 ரூபாய்
1kg கீரிசம்பா 140 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தின் மகாசிவராத்திரி பெருவிழா எதிர்வரும் 2026.02.15 ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் 2026.01.27 இன்று காலை 09.30 மணிக்கு, மன்னார் மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகவேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், மகாசிவராத்திரிப் பெருவிழா ஒழுங்குமுறையுடனும் பாதுகாப்பாகவும், பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையிலும் நடத்தப்படுவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், பிரதேச சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் வீதி ஒழுங்குபடுத்தல், இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்களின் ஊடாக போக்குவரத்து மேலாண்மை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு பணிகள், மின்சார விநியோகம், நீர் விநியோகம், உணவு வழங்கல் (சாப்பாட்டு கடைகள் மற்றும் அன்னதான மடங்கள்), பாதுகாப்பு விடயங்கள், சாரணியர் சேவை, செஞ்சிலுவை சேவை, சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படை, மருத்துவ அவசர ஊர்தி சேவைகள் ஆகியவை தொடர்பாக தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், வாகன அனுமதி பத்திரங்கள் வழங்கல், பிரதேச செயலகம் – மன்னார் இணைப்பு அலுவலகம் அமைத்தல், தற்காலிகக் கொட்டகைகள் அமைத்தல், வர்த்தக நிலையங்கள் ஒழுங்குபடுத்தல், வாகனத் தரிப்பிடங்கள் ஏற்பாடு, ஊடக நடவடிக்கைகள், தீயணைப்புச் சேவை, களப்பயண திகதி நிர்ணயம், விலைக்கட்டுப்பாடு உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், அரச திணைக்களங்கள், பாதுகாப்புப் பிரிவுகள், சுகாதார சேவைகள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மகாசிவராத்திரிப் பெருவிழா – 2026 சிறப்புறவும் அமைதியான முறையிலும் நடைபெற முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தனர்.
 
siva1 siva2 siva3
 
siva4 siva5 siva6
 
 
siva67
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்றைய தினம் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அவர்கள் வருகை தந்து இலங்கையின் டிற்வா புயல்காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களினையும் , எதிர்கால முதலீட்டு வாய்ப்புக்களினையும் குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மன்னார் கோட்டை மற்றும் டோறின் பங்களா போன்றவற்றினை எப்படி வரலாற்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகை‌யி‌ல் எப்படி புனரமைப்பு செய்வது என ஆராய்ந்தார்.

did8 did9 did10

did11

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த 42 இந்து ஆலயங்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு இன்று காலை 10.00 மணி அளவில் அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், 17 கிறிஸ்தவ ஆலயங்களுக்கு தலா 25,000 ரூபாய் மற்றும் 6 பள்ளிவாசல்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவுகள் முதற்கட்டமாக ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, மூன்று பௌத்த விகாரைகளுக்கான நிவாரண கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
did1 did2 did3
 
did4 did5 did6
 
did7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையான சூரியப் பொங்கல் விழா, அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் ஆரம்பமாக அழகிய வரவேற்பு நடனம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து உழவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை மதிக்கும் வகையில் உழவர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. அதேபோல், தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகளைப் படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதமக் கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன், மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பாக்கினர்.
பாரம்பரியம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த சூரியப் பொங்கல் விழா வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
 
pongal26 1 pongal26 2
 
pongal26 3 pongal26 4
pongal26 5 pongal26 6
 
pongal26 7 pongal26 8
 
pongal26 9 pongal26 10
 
pongal26 11 pongal26 12
 
pongal26 13 pongal26 14
 
pongal26 15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆற்று மண் அகழ்வு தொடர்பான கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
 
en1 en2
 
en3 en4
 
en5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரச காணி முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான ஐந்து ஆண்டுதிட்ட செயலாற்றுகை மதிப்பீடு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் வட மாகாண காணி ஆணையாளர் கலந்து கொண்டதுடன் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி கிளை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

land0 land1

land2 land3

 

 

 

 

 

 

 

 

 

 

மேற்படி மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் அரச கடமைகளை மாவட்ட செயலக அரச அலுவலகங்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் வெளிப்படுத்தி ஆரம்பித்து வைத்தனர்.
“தூய்மையான சிந்தனை வளமான நாடு” என்னும் உயரிய சிந்தனை அடங்கிய வாழ்த்து செய்திகளுடன் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் அலுவலர்களுக்கு கை விசேஷம் வழங்கி ஆண்டின் முதல் நாளை மகிழ்வாக ஆரம்பித்து வைத்தார்.
 
fday1 fday2 fday3
 
fday4 fday5 fday6
 
fday7 fday8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மன்னார் மாவட்டத்தில் 29.12.2025 அன்று நடைபெற்ற விசேட நடமாடும் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களாக ஜெகதீஸ்வரன் மற்றும் திலகநாதன், மன்னார் நகர முதல்வர் கௌரவ டானியல் வசந்தன், மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரர்கள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆரம்ப நிகழ்வாக தூய்மையான இலங்கை பிரஜா சக்தி தேசிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து ஹிம்கம வேளைத்திட்டங்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பூரண அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாந்தை மேற்கு, நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 99 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் டித்வா சூறாவளி மற்றும் வெள்ள பாதிப்புக்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்ட ஈடு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
இதன் போது கால்நடை வளர்ப்பாளர்கள் 10 பேருக்கும்,விவசாய செய்கையாளர்கள் 09 பேருக்கும்,மேட்டு நில பயிர் செய்கையாளர்கள் 11 பேருக்கு இவ்வாறு இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இந்நடமாடும் சேவையின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அரச சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. அரச சேவைகளை மக்களின் அருகே கொண்டு செல்லுதல், நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல் மற்றும் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாற்றுதல் என்பதே இந்நடமாடும் சேவையின் பிரதான நோக்கமாக இருந்தது.
இந்நடமாடும் சேவையின் கீழ் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சேவைகள், தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள், சமூக நலன் தொடர்பான Aswasuma கொடுப்பனவுகள், ஓய்வூதியம், காணி தொடர்பான சேவைகள், தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல், விவசாயம், கால்நடை, மீன்வளம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல அரச சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
 
mobile1 mobile2 mobile3
 
mobile5 mobile6 mobile7
 
mobile8 mobile9 mobile10
 
mobile12 mobile13 mobile15
 
mobile16 mobile17 mobile18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிட்வா புயல்,வெள்ள அனர்த்த பாதிப்புகளுக்கு மன்னார் Hotelier's சங்கம் ரூ. 3,13,000 நிதியுதவி!


டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில், மன்னார் Hotelier's சங்கம் ஜனாதிபதி நிதிக்காக ரூபா 3 இலட்சத்து 13 ஆயிரம் (ரூ. 3,13,000) நிதியுதவியை வழங்கியுள்ளது.


இந்த நிதியுதவி 24.12.2025 பிற்பகல் 3.30 மணியளவில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


Ahash Hotel – LKR 100,000


Adampan Farm – LKR 10,000


Four Tees Inn – LKR 10,000


Hotel Agape – LKR 10,000


Juli Reception – LKR 10,000


Choice Restaurant Staffs – LKR 15,000


M.R.N Chicken Shop – LKR 30,000


J.A.N Vegetable Shop – LKR 30,000


Vetri Supermarket, Pesalai – LKR 25,000


Coccos Garden – LKR 15,000


Ahash Hotel Staffs – LKR 20,000


Victory’s Gardens Hotel – LKR 10,000


Sakthi Supermarket Staffs – LKR 6,000


Pearl Rest Homestay – LKR 10,000


Arunothaya Supermarket Staffs – LKR 12,000

 

fu1 fu2

 

மன்னார் மாவட்ட செயலக 2025 ஆம் ஆண்டின் ஒளி விழா மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வு மன்னார் மறைமாவட்ட பேராலய பங்குதந்தை வண.கிறிஸ்துநாயகம் அடிகளார் அவர்களின் சிறப்பு திருப்பலி யுடன் ஆரம்பமாகியது, மேலும் மாவட்ட செயலாளர் அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது, இறுதியாக தந்தார் குழு பாடலுடன் நிறைவுற்றது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மிகவும் எளிமையாக இடம்பெற்ற ஒளி விழாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டலில் சிறப்பாக மன்றாடப் பட்டது.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
OLI251 OLI252 OLI253
 
OLI254 OLI255 OLI256
 
OLI257 OLI258 OLI259
 
OLI2560
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிவாரண உதவியாக நுளம்புத்திரி மற்றும் பிஸ்கெட் பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் இன்று காலை 11.30 மணியளவில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
601857412 1298170312349395 8221410586195795149 n
வடமாகாண மகளிர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (17-12-2025) மாலை அடம்பன் பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண மகளிர் விவகார புனர் வாழ்வளித்தல்,சமூக சேவைகள், கூட்டுறவு ,உணவு வழங்கல் விநியோகம் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 49 பெண் பயனாளிகளுக்கான உதவித் திட்டம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
சுய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவர்களின் சுய தொழில் நடவடிக்கை ளை மேம்படுத்தும் நோக்குடனும் குறித்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர்,உள்ளடங்களாக திணைக்கள அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
vidatha8 vidatha9vidatha10
 
vidatha11 vidatha12 vidatha13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் உயர் திரு.க.கனகேஸ்வரன் ஜயா அவர்கள் தலைமையில் 18.12.2025 அன்று மாவட்டச்செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்திப்பிரினரின் நிதி அனுசரணையுடனும், மாவட்ட விதாதா நிலையத்தினால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்சித் திட்டத்தினால் பயனடைந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
அத்தோடு, இலங்கை மத்திய வங்கிக்கிளை -கிளிநொச்சி, சிரேஷ்ட முகாமையாளர்களால் எமது மாவட்டத்தில் சுய தொழில் முயற்சியாளர்களோடு கடமையாற்றும் மாவட்டச்செயலக மற்றும் பிதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களும் "வங்கி நிதி முகாமைத்துவம்" தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தமர்வு நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.
 
vidatha1 vidatha2 vidatha3
 
vidatha4 vidatha5 vidatha6
 
vidatha7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும் பயன்பாட்டுக்குரிய நிலையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், டிட்வா புயல் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த கீழ்காணும் வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டிய திருத்தம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் விரிவாக ஆராயப்பட்டன:
குஞ்சுகுளம் வீதி
முள்ளிக்குளம் – பல்லமடு வீதி
பரப்புக்கடந்தன் வீதி
மேற்கண்ட வீதிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் (Road Development Department – RDD) கீழ் உள்ள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (Road Development Authority – RDA) பொறுப்பிலுள்ள வீதிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் கீழ் பராமரிக்கப்படும் வீதிகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன்,
இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள், அடுத்த ஆண்டில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட புதிய வீதி திட்டங்கள், அவற்றுக்கான தேவையான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் ஆரம்பிக்க வேண்டிய காலக்கெடுகள், மற்றும் செயல்படுத்தும் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
இவ்விசேட கலந்துரையாடலில்,
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ம. ஜெகதீஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாகாண RDA பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
didva1 didva2 didva3
 
didva4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15.12.2025 அன்று மன்னார் நகர சமுர்த்தி தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு உதவியாக ரூபா 54,000 தொகை வழங்கப்பட்டது.
இந்த நன்கொடை, மன்னார் பிரதேச மட்ட சமுர்த்தி தொழிற்சங்கத் தலைவரால், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் நகர பிரதேச செயலாளர், மன்னார் நகர உதவி திட்டமிடல் பணிப்பாளர், மன்னார் நகர சமுர்த்தி தொழிற்சங்கச் செயலாளர் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

samu1 samu2 samu3

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது
அனர்த்த நிலைமையினால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொருட்கள்
• மன்னாரில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவற்கான நிரந்தர வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துங்கள்
• யோத வாவி நீரேந்துப்பகுதியில் அனுமதிக்கப்படாத காணி கையகப்படுத்துதலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்
- ஜனாதிபதி
மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும், நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முறையான ஆய்வை மேற்கொண்டதன் பின்னர் தொடர்ந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மீனவ சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்படாவிட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்காக சீன தூதரகத்துடன் கலந்துரையாடுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
யோத வாவி நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் 70 குடும்பங்கள் அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்துள்ளதோடு, அந்த வீடுகளை நிர்மாணிப்பது மற்றும் இதற்கு தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்காக ஒரு குழுவை நியமித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரிய காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் வசதிகளை விரிவுபடுத்துதல், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்காக திறைசேரியினால் வழங்கப்படும் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் பேரில் பிரதேச செயலாளர்கள் மூலம் விரைவாக வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை நிர்மாணித்தல், நீர் வழங்கல் மற்றும் மின்சார விநியோகத்தை சீர்செய்தல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் என். வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதேஸ்வரன், டி. ரவிகரன், சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன் ஆகியோர், நிதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் டி. முருகேசன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
presidentvisit1 presidentvisit2 presidentvisit3
 
presidentvisit4 presidentvisit5 presidentvisit6
 
presidentvisit7 presidentvisit8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
9.12.2025 செவ்வாய் கிழமை பி.ப.3.50 மணி
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை.
⛈️. வடகிழக்கு பருவ மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
🌧️ .எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களில் ( சீதுவிநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு) வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
🐄🐂. கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்தத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தங்கள் கால்நடைகளை பராமரிக்கவும்.
📢. தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கை களை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மன்னார் மாவட்டம்.
மன்னார் மாவட்டம் ஆனது தற்போது இடம்பெற்ற பேரிடரின் போது பாரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும்
பல மக்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு வகையில் நிவாரணம் பொருட்களை வழங்கிக் கொண்டு வருவது நாம் அறிந்ததே அதற்கு நன்றியினைத் தெரிவித்துகொள்ளுகின்றோம் எனினும் எமது மாவட்டத்தில் சில கிராமங்களுக்கு உதவிகள் இன்னும் கிடைக்கப்பெறாமலும் பல கிராமங்களுக்கு திருப்பி திருப்பி பல்வேறு உதவிகள் கிடைக்கப் பெறுவதும் நாம் அறியக்கூடிய வகையில் உள்ளது
எனவே நமது மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் அதற்காக இணைப்பு அலுவலர்களை நியமித்து உள்ளோம் எனவே உங்களது உதவிகளை அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போது
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்றடைவதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதோடு பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் தவிர்த்து கொள்ளலாம்.
மாவட்ட செயலகம்
~~~~~~~~~~~~~~
திரு.றொகன் குரூஸ்
பிரதி திட்டமிடல் பணிப்பளர்
T. P - 0770027602
- 023 2222235
மன்னார் நகரம்
~~~~~~~~~~
திரு. ஜூட் மைக்கல் ராஜ்
உதவி திட்டமிடல் பணிப்பளர்
T.P- 0770585816
மாந்தை மேற்கு
~~~~~~~~~~~
திரு. டிலைக்சன்
உதவி பிரதேச செயலாளர்
T.P- 0779949604
மடு
~~~
திரு.கிளரன்ஸ்
அபிவிருத்தி உத்தியோகத்தர்
T.P- 0766949864
முசலி
~~~~~
திரு.இர்பான்
அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்
T.P- 0758422870
நானாட்டான்
~~~~~~~~
திருமதி.மலர்விழி
நிர்வாக அலுவலர்
T.P- 0776333634
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தொடர்ந்து, விசேட கலந்துரையாடல் இன்று(3) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில், பல துறைகளின் மாகாண அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தற்போதைய நிலைமைகளை ஆய்வு செய்தனர்.
கலந்துரையாடலின் மாவட்டத்தின் தொடர்ச்சியான பாதிப்புகள் மற்றும் அவற்றை சமாளிக்க வேண்டிய முக்கிய முன்னுரிமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக,
வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளை பாதுகாப்பாக அகற்றுதல்
பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்து கிருமிநாசினி செய்வது
தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றி நுளம்பு பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்
விவசாயப்பயிர்கள் மற்றும் கால்நடை துறையில் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள்
பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை திட்டங்கள்
அழிவு அடைந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடுகளை விரைவாக வழங்குதல்
பாடசாலைகளை மீண்டும் செயல்படுத்துவதற்கா ன முன்னாயத்தப் பணிகள்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை சீரான முறையில் விநியோகம் செய்தல்
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தங்களது அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர்.
மாவட்டத்தில் நிலவும் பேரிடர் சூழ்நிலை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வகையில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.
 
DISASER43 DISASER44 DISASER45
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னார் மடு பிரதேசச் செயலர் பிரிவின் தேக்கம் கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட சுற்றுலா தளமான தொங்கு பாலம் வெள்ள அனர்த்தம் காரணமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.

“மறு அறிவித்த வரும் வரை பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் “.

DISASER41 DISASER42

மேற்படி இன்று மன்னார் வருகை தந்த பிரதம செயலாளர் அடங்கிய குழுவினர் மன்னாரின் வெள்ள நிலவரம் தொடர்பான சகல அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர் உடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அவசரகால நிலையை துரித முறையில் கையாள்வதில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்பிண செயற்படுத்த வலியுறுத்தி மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பணியாற்ற வேண்டிக் கொண்டார்.
துரித முறையில் மீட்பு பணியில் ஈடுபட்டு இழப்புகள் சீர் செய்யும் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் கூடிய அக்கறை காட்டினார். அனர்த்தம் இடம்பெற்ற இடங்களிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கியும் அவர்களுடன் கலந்து உரையாடல் மேற்கொண்டனர்.
 
DISASER36 DISASER37 DISASER38
 
DISASER39 DISASER40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நிலவும் இயற்கை அனர்த்த சூழலில் எமதுமாவட்டத்தின் ஐந்து பிரதேச சபைகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்புகள் உங்கள் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் இறந்து காணப்பட்டால் உடனடியாக கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதனை அகற்றுவதற்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மன்னார் நகர எல்லை -
074 3200558
மன்னார் பிரதேச சபை -
077 1231600
மாந்தைமேற்கு பிரதேச சபை -
077 2761919
நானாட்டான் பிரதேச சபை-
071 3319993
முசலி பிரதேச சபை-
071 1190119
பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் -
075 6982903
 
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளநிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB), மன்னாரின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த தகவல் முழுவதும் வதந்தி என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.
மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பான குழாய் கிணறுகளில் இருந்தே பெறப்படுகிறது. இந்த நீர்மூலங்கள் மேற்பரப்பு வெள்ளதால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவிடல்லை.
எங்களின் ஆய்வகப் பிரிவு தொடர்ச்சியாக நீர்தரத்தை பரிசோதித்து மன்னார் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது மற்றும் குடிப்பதற்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.
ஆகையால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான எந்த அறிவிப்பும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
நன்றி.
தகவல்
மாவட்ட பொறியியலாளர்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
மன்னார்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புகளை அறிந்து கொள்வதற்காக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் இன்று நானாட்டான் பிரதேசத்துக்குட்பட்ட கட்டக்காடு இடைத்தங்கள் முகாமிற்கு நேரில் விஜயம் செய்தார்.
முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு, அவர்களின் நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளப்பட்டு, தேவையான உதவிகள் விரைவில் வழங்கப்படுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.
 
DISASER30 DISASER31 DISASER33
 
DISASER34 DISASER35
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் இன்று மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.
அவரது பயணத்தின் போது, ஆளுநர் அவர்கள் நானாட்டான் பிரதேச செயலத்துக்குட்பட்ட அருகம்குண்டு, மடுக்கரை உள்ளிட்ட அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொண்டார். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடிய ஆளுநர் அவர்கள், தேவையான நிவாரண உபகரணங்கள் மற்றும் உடனடி உதவிகளை வேகமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தில் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.
 
DISASER24 DISASER25 DISASER26
 
 
DISASER27 DISASER28 DISASER29
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண அனர்த்த சூழ்நிலை காரணமாக மன்னார் மாவட்டமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன மாவட்ட அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையம் செயற்படுகின்றது. எனவே பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க விரும்புபவர்கள் எமது மாவட்ட செயலகத்தின் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளோம். எமது மாவட்ட செயலகத்தினை தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தொடர்புகளுக்கு
றொகான் குரூஸ்
பிரதி திட்டமிடல் பணிப்பளர்
T. P - 0770027602
- 023 2222235
மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இன்று (02.12.2025) காலை 9.00 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் நிலையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு, மற்றும் பல துறைகளின் ஒருங்கிணைப்பு தேவைகள் குறித்து விரிவாக ஆராய்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
விவாதிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்
1. சுகாதாரத்துறை:
நலன்புரி மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அவசர மருத்துவ சேவைகள் வழங்கல்
தண்ணீர் மாசுபாடு தடுப்பு மற்றும் நுளம்பு பெருக்கு கட்டுப்பாடு
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோருக்கான சிறப்பு சுகாதார பராமரிப்பு
இடருக்குப் பிந்தைய தொற்றுநோய் அபாயங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள்
2. விவசாயத்துறை:
புயலால் சேதமடைந்த பயிர்களுக்கான ஆரம்பிக மதிப்பீடுகள்
கால்நடை வளர்ப்பில் ஏற்பட்ட சேதங்களுக்கு ஆதரவுத் திட்டங்கள்
சேதமடைந்த விவசாய உட்கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு
3. நீர் பாசனத்துறை:
நீரேற்ற வாய்க்கால்கள், அணைகள் மற்றும் தடுப்பணைகளின் பாதுகாப்பு நிலை ஆய்வு
வெள்ளநீர் வெளியேற்றத்துக்கான அவசர நடவடிக்கைகள்
நீர் பாசனத் திட்டங்களில் நீர் மேலாண்மை கட்டுப்பாடுகள்
தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் அடிப்படை வசதிகள்—உணவு, குடிநீர், சுகாதாரம், சத்துணவு—உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டறிந்ததுடன், தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.
அனர்த்த சூழ்நிலையில் முப்படையினர், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் பாராட்டப்பட்டன. மேலும், சீரற்ற வானிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், கௌரவ நகர சபை பிரதேச உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
DISASER19 DISASER20 DISASER21
 
DISASER22 DISASER23