மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற, பெண்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் பன்முகச் சந்தை கிரிசாலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது (2024-03-12). இதனை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பெண்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வீட்டு அலங்கார பொருட்கள், கைவினைப் பொருட்கள், சுவையூட்டி வகைகள், பசுமை உற்பத்திகள் பொருட்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டன. இந் நிகழ்வில், வணிக ஆலோசனைகள் மற்றும் தொழில் செய்திகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கிரிசாலிஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்ச்சியில் பெண்கள் தலைமையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
01zc04
0203
மன்னார் மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய ஜனாப். அலியார் அவர்கள் நேற்று(5) அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவருக்கு நினைவுச்சின்னம், நினைவுப்பரிசில்களும் அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
 
sam1 sam2
 
sam3 sam7
 
sam8 sam9
 
sam10 sam11
 
sam12
மன்னார் பிரதேசச் செயலகம் மற்றும் அட்ரா நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் சந்தை (05.03.2024) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் பிரதேசச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
 
tr1 tr2
 
 
tr3 tr5
 
tr6 tr7
 
tr8
 
 
 
 
 
 
 
 
 
இலங்கை செஞ்சிலுவை சங்கம் மன்னார் கிளை NAITA இன் கீழ் பதிவு செய்யப்பட்ட NVQ Level 3 க்கான பராமரிப்புக்கான சரியான சான்றிதழ் படிப்பின் தொடக்க நிகழ்வு மன்னார் சுகாதார சேவை பிராந்திய பணிப்பாளரின் தலைமையில் (04.03.2024) காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக ஜெய்கா மண்டபத்தில் வைப்பவரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார் அவருடன் செஞ்சிலுவை சங்கத் தலைவர், மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், MOH madu, தாதியர்கள், நைட்டா மாவட்ட முகாமையாளர், சான்றிதழ் படிப்பினை தொடரும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
01za02
0305
தேசிய சேமிப்பு வங்கி மன்னார் கிளையின் ஏற்பாட்டில் சேமிப்பினை ஊக்குவிக்குமுகமாக ஊர்தி பவனி இடம் பெற்றது. எமது அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஊர்திபவனியை ஆரம்பித்து வைத்தார்.
 
01z02
03
மன்னார் மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21) மாலை 1.30 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
அந்த வகையில் கடந்த கூட்டக் குறிப்பின் விடயங்களும் அவற்றின் முன்னேற்றங்களும் மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தின் அனுமதி பெற வேண்டிய விடயங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள்,
செட்டியார் கட்டை அடம்பனுக்கு சட்டவிரோதமாக நீர் எடுக்கும் வாய்க்காலினை மூடுவது தொடர்பான விடயங்கள், வங்கிகளின் விவசாயம் சார் செயற்பாடுகள், விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கம நல அபிவிருத்தி தொடர்பான செயல்பாடுகள், விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் தொடர்பான விடயங்கள், கால்நடை பராமரிப்பு பற்றிய செயற்பாடுகள், வங்கி செயற்பாடுகள் மற்றும் பனை அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட விவசயப்பனிப்பாளர், நீர்பாசன திணைகளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர், பல்துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும், விவசாய அமைப்புகளின் தலைவர், செயலாளர், பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர் .
 
A1 A2
 
A3
 
 
 
 
 
+2
 
 
所有心情:
Domin Emmanuel JD、Thevarasa Ketheeswaran和其他16位用户
 
 

தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று(19) மன்னார் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கருப்பு பட்டி அணிந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

20 1 20 2

20 3

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இவ்வருடத்திற்கான முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனேகேஸ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்போடு 16.02.2024அன்று மன்னார் மாவட்டச் செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சட்டவிரோத கடல் அட்டை, i project செயத்திட்டத்தின் மூலம் பூரணப்படுத்தப்படாமல் உள்ள வீதிகள், காணிப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், போக்குவரத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, நீர்ப்பாசனம் தொடர்பிலும் இன்றைய தினம் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன .
மேலும் இக் கலந்துரையாடலில் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணசபை மற்றும் மன்னார்மாவட்ட திணைக்களத்தலைவர்கள , வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
dcc242 dcc243
 
dcc244 dcc245
 
dcc246 dcc247
 
 
 
 
 
 
+10
 
 
所有心情:
Thevarasa Ketheeswaran、Sathiyaseelan Shakthy和其他35位用户
 
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்' எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் ,நானாட்டான் ,முசலி ,மாந்தை மேற்கு ஆகிய 4 மீனவ சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
 
cool1 cool2
 
cool3 cool4
 
 
மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திரு செல்வகுமார் அவர்களின் தலைமையில் நேற்று 12.02.2024 மாலை 4 மணிக்கு மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் அவர்களோடு திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர் , பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
வருடாந்த ஒன்று கூடல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாய் சென்றவர்களுக்கான கௌரவிப்பு, வட மாகாண மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கான கௌரவிப்பு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு நடைபெற்றதோடு நடனம், கவிதை, பாடல்கள் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 
GET111 GET3
 
 
GET2 GET3
 
 
GET4 GET5
 
GET6 GET7
 
GET8 GET9
 
GET10 GET11
 
GET12 GET13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து சுற்று போட்டி இவ்வருடம் யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரி எதிர்வீரசிங்கம் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. தற்போதைய கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின் எண்ணத்தில் 2018 இல் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டு இவ் வருடம் யாழ்பப்பாணத்தில் நடைபெற்றது. வருகின்ற வருடம் மன்னார் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது கடந்த வருடம் போன்று இம்முறையும் இரண்டாவது தடவையாக மன்னார் மாவட்டம் கிண்ணத்தினை சுவிகரித்து கொண்டது.  வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

cri5  cri 1

cri2  cri4

76வது சுதந்திர தின நிகழ்வு
==================
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுதந்திர தின பேரணி ஆரம்பித்து மன்னார் மாவட்ட செயலகத்தை காலை 8.55 மணியளவில் வந்தடைந்தது. பின்னர் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து இரு தேசிய மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேச விடுதலைக்காக போராடி உயிர்நீர்த்த அனைவருக்கும் இரண்டு நிமிட நேர அமைதிபிராத்தனை இடம்பெற்றது. அத்தோடு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும், பலூன் பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமதகுருமார்களின் ஆசியுரைகளுடனும் நிகழ்வுகள் ஆரம்பமானது.
தொடர்ந்து சமாதானத்தை வலியுருத்தும் வரவேற்பு நடனம் மாவட்ட மற்றும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. வரவேற்புரையினை மேலதிக மாவட்ட செயலாளர் திரு. ய. பரம்தாமன் அவர்களால் வழங்கப்பட்டது. 76ம் ஆண்டுக்கான சுதந்திர உரையானது மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. க. கனகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்வமதத்தலைவர்கள் மற்றும் பாண்ட் வாத்தியக்குழு மாணவர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிறைவில் நன்றியுரையினை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி) ம. சிறிஸ்கந்த குமார் அவர்கள் வழங்கி வைத்தார், தொடந்ர்து சர்வமத தலைவர்கள், வருகை தந்திருந்த விசேட விருந்தினர்களுடனான மரநடுகை நிகழ்வுடன் 76வது சுதந்திர தின வைபவம் நிறைவு பெற்றது.
மேற்படி நிகழ்வில் பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளககணக்காய்வாளர். பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள். கிளைத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
 
05 copy01 copy
06 copy04 copy
 
08 copy09 copy
10 copy14 copy
20 copy21 copy
 
 
 
மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலிம்தீன் மன்னார் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக, மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் இன்று (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அணைத்து உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 
29 1 29 2
 
29 3 29 4
 
 
 
 
Environmental Impact Assessment (EIA) Report for Proposed 250MW Mannar Wind Power Project (Phase II)
விசேட அமைச்சவை தீர்மானத்துக்க மைய மன்னார் மாவட்டத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்ட
250 மெகாவற் காற்றலை சக்தி திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டறிக்கை தொடர்பானது
மேற்படி விடயம் தொடர்பாக,
இலங்கை நிலைபெறுசக்தி அதிகாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட செயற்திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையானது 23.01.2024 ஆம் திகதிமுதல் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வேலைநாட்களில் காலை 8.45 மணி தொடக்கம் மாலை 4.15 மணிவரை 30 நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். (விபரம் இணைக்கப்பட்டுள்ளது) மன்னார் மாவட்டச்செயலகத்தில் 4ம் தளத்திலுள்ள வரவேற்பிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவரேனும் இவ்விளம்பரத்திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது கருத்துக்களை பணிப்பாளர் நாயகம்,மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு எழுத்து மூலம்சமர்ப்பிக்கமுடியும் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்.
 
தங்களது கருத்துக்களின் பிரதி ஒன்றினை ஏமக்கும் வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
மாவட்ட செயலாளர்
 
 
28 1
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் சிரமதான பணிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் , பொதுமக்கள் பங்குபற்றுதலோடு இன்று(25/01/2024)
சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த சிரமதான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதோடு எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
 
25 1  25 2
 
25 3  25 4
 
25 5  25 6
 
25 7
 
 
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவாக்கை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்பில் 2024 ஆம்ஆண்டுக்கான பிரமாண்ட பொங்கல் விழா செவ்வாய்கிழமை (23) காலை ஈச்சலவாக்கை மீனாட்சி அம்மன் ஆலய வளகத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீஸ் கந்தகுமார்,மற்றும் மறவன்புலவு சச்சிதானதன், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் ஈச்சளவாக்கை பாடசாலையில் இருந்து விருந்தினர்கள் தமிழ் பாரம் பரிய மே தாள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு 108 பானைகளில் பாரம் பரிய முறைப்படி பொங்கல் பொங்கி நிகழ்வு ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் 150 பேர் இணைந்து பாரம்பரிய நடனம் ஒன்றை அரங்கேற்றியதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள், போட்டி விளையாட்டுக்கள் என்பனவும் இடம் பெற்றது .
அதே நேரம் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது.
 
23 11 23 1
 
23 2 23 3
 
23 4 23 5
 
23 8
 
 
 
 
 
+27
 
 
所有心情:
Jesupatham Joanofark、Thevarasa Ketheeswaran和其他55位用户
 
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நாடு முழுவதும் அரச கரும மொழிக்கொள்கையை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தும்பொருட்டு, நூலகங்களுக்கு மும்மொழி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக மன்னார் பொது நூலகத்திற்கு மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் இன்று 2024.01.22 மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து மும்மொழி நூல்களை திரு.சே.லெ.றெனால்ட் செயலாளர் மன்னார் நகரசபை அவர்களிடம் கையளித்தார்.
மக்களிடையே வாசிப்பு கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பரஸ்பர புரிதலை அதிகரிக்கவும் பொதுமக்கள் தம் நாட்டு தேசிய மொழியில் தமது அறிவு மற்றும் திறனை வளர்த்துக்கொள்ளவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மன்னார் மாவட்டச்செயலாளருடன் இணைந்து திரு.ய.பரந்தாமன் மேலதிக மாவட்டச்செயலாளர் (நிர்வாகம்), திரு.பு.டிலிசன் பயஸ் உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்டச்செயலக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
22 01 20241
IOM பிரதிநிதிகளுக்கும் மாவட்டச்செயலக அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பு. (19/01/2024)
மன்னார் மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் உள சமூக, வாழ்வாதாரமேம்பாடு,இழப்பீடுகள் தொடர்பான கடந்தகால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் IOM நிறுவன பங்களிப்புடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் மதிப்புக்குரிய க.கனகேஸ்வரன்,திட்டமிடல் பனிப்பாளர்,மாவட்ட இழப்பீடுகளுக்கான அதிகாரி ,IOM நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விடயத்தோடு தொடர்புடைய மாவட்டச்செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 19 01 20244 19 01 20245
 
19 01 20246
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
76 ஆவது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் 19.01.2024 அன்று காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதமக கணக்காளர், பிரதமர் உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், முப்படை பொறுப்பு அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
19 01 2024 19 01 20242
 
 
19 01 20243
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மன்னார் மாவட்டத்தின் நடப்பாண்டின் முதலாம் காலாண்டுக்கான விலை நிர்ணய குழு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று(18) 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பதில் திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 1 19 01 2024 2
 
3
 
 
 
 
 
 
 
 
 
 
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையில் அவசர அனர்த்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்று(18) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் இராணுவ மற்றும் கடற்படை கட்டளை தளபதிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், அனர்த்த முகாமை துவ உத்தியோகத்தர்கள் மற்றும் ராணுவ கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
31 32
 
33 34
மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களால் நடாத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (17.01.2024) காலை 9.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவரும் மற்றும் கணக்காளருமான திரு. செல்வகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் உட்பட மேலதிக அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதோடு உழவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
pongal 1 2
 
3 4
 
5 6
 
7 8
 
9 11
 
12 13
 
14 15
 
 
 
 
 

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் கெளரவ K.N. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்ட செயலகம் மன்னார் வருகை தந்து காற்றாலை, கனிய மணல் அகழ்வு மற்றும் வெள்ள நிவாரணம், வளமாக்கிக்கான மானிய கொடுப்பனவு தாமதம் தொடர்பாக மக்களினால் முன் வைக்க பட்ட பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.

21  2

5 34

 

 

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ஆண்டாங்குள விசேட தேவையுடை யோருக்கான கல்வி அலகில் எங்களால் முடியும்(WE CAN) என்ற மாற்று வலுவுடையோர் அமைப்பினரால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வின் பதிவு.

22  2

3  4

 

 

 

 

 

 

மாந்தை மேற்கு பிரதேச செயலகத் திற்கு நேற்று விஜயம் செய்த மாவட்ட செயலாளர் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றுண்டிசாலையினை திறந்து வைத்த துடன் ஒரு தொகுதி அளிப்பு உறுதியினையும் பொதுமக்களுக்கு வழங்கிவைத்தார் இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தருடன் கலந்துரையாடியதுடன். அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

23 2

3  4

5 6

7 8 

 

 

 

 

 

 

 

 

 

 

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட 05 பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மூன்று ஆடுகள் வீதம் ரூபாய் 75,000 பெருமதியான ஆடுகள் 120 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது.

 

 24 2

3  4

 

வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் மாவட்ட செயலாளரின் சந்திப்பு 11.01.2024 நேற்றையதினம் நடைபெற்றது. கிராம உத்தியோகத்தரினால் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் ஆராயப்பட்டது கலந்துரைடலில் மேலதிக மாவட்ட செயலலாளரும் உடனிருந்தார்.

25 2

3

 

 

 

 

 

 

 

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மற்றும் முகாமைத்துவ நிர்வாகம். சுற்றுலா அமைச்சினால் நடாத்தப்பட்ட வரவேற்பறை முகாமைத்துவம் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று(11) காலை 9.45 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், கற்கை நெறி விரிவுரையாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கற்கை நெறியை முடித்த மாணவர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
26 2
 
3 4
 
5 6
 
7 8
 
9 10
 
11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக காற்றாலை மின் உற்பத்திக்கான காற்றாலைகள் அமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் சாத்திபாடுகளினை ஆராயும்கலந்துரையாடல் இன்று காலை 11.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நீலோற்பவ மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பங்கேற்கிருந்ததுடன் இக் கலந்துரையாடலை மன்னார் மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களம் ஒழுங்குபடுத்தியிருந்தது. கலந்துரையாடலைத் தொடர்ந்து காற்றாலை அமைக்கப்படவிருக்கும் பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு நிலமைகள் ஆராயப்பட்டதுடன் பிரதேச வாழ் மக்கள், கிராம மட்ட அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து விடயம் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டு அனுமதிகள் பெறப்பட்டு, தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டதன் பின்னரே அரசாங்க அதிபரால் அதற்குரிய அனுமதி வழங்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

11 1 24 1  11 1 24 2

11 1 24 3  11 1 24 4

11 1 24 5  11 1 24 6

11 1 24 7

மன்னார் யாழ்ப்பாண ஏ 32 வீதியில் பள்ளமடு கிராமத்தில் இன்று 10/01/2024 பங்கு தந்தை அவர்களால் இறைவழிபாடுகள் நடைபெற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலிய கூட்டுதாபன பிராந்திய முகாமையாளர் இணைந்து நாடாவினை வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் மேலதிக மாவட்ட செயலாளர் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் விடத்தீவு அன்பர்கள் அனைவரும் இத்திறப்பு விழாவில்கலந்து சிறப்பித்ததோடு சகல வசதியினை கொண்ட எரிபொருள் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    2

 

3   4 

418554621 769065201926578 7045629097479047796 n

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(9) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.
இதன்போது மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை துப்பரவு செய்து நிலைபேறானதாக தொடர்ந்து அவ்விடங்களை நுளம்புப் பரவலில் இருந்து பாதுகாத்தல், அதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் டெங்கு நுளம்புப் பரவலில் மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.
குறித்த நிகழ்வில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள், பொதுச் சுகாதார வைத்தியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், எனப் பலர் கலந்துகொண்டனர்.

  

 09 1 24 1  09 1 24 2

5  09 1 24 3

மிகவும் தரமானமுறையிலும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளுர் உற்பத்தியாளரான திருமதி ஜெனா அவர்களின் விற்பனை மெம்படுத்தல் நிகழ்வில் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் உயர்திரு க. கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார். Good Life என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு தாயரிக்கப்படும் ஆரோக்கியமான தயாரிப்புக்களின் சிறந்த நனமதிப்பை பெற்று வளர்ந்து வரும் நிறுவனத்தின் 3வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்றையதினம் (6.01.2024) வாழ்வுதயம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் அவர்கள் இன்றைய வாழ்க்கை முறையில் இவ்வகையான உற்பத்திகள் மிகவும் முக்கியமானது எனதும், இவ்வகையான தரமான உற்பத்திகளை ஊக்கப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் மாவட்ட செயலகம் மிகவும் உறுதுனையான செயற்படும் எனவும், தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட விற்பனையாளர்களை பாராட்டி பரிசில்களும் வழங்கி வைத்தார், இந்நிகழ்வில் மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாதா உத்தியோத்தர், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2024 01 08 at 10.54.15 AM

 

 

1                            2                                                                                  

3  4

5  6

8  9

மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஆரம்பிக்கப்பட்ட 'அறிவுப்பரிமாற்றம்' செயற்பாட்டின் முதலாவது நிகழ்ச்சி (3.1.2024) பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தொடரின் முதலாவது நிகழ்வினை மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. சிவராஜா அவர்கள் வழங்கினார். இன்றைய நிகழ்வின் கருப்பொருளாக, அலுவல முகாமைத்துவ செயற்பாடுகள், ஊழியர் ஒருவர் அலுவலகத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், நடத்தைச் செயற்பாடுகள், இலக்கு, நோக்கு, தூரநோக்கு எவ்வாறு அமைகின்றது போன்ற விடயங்களை மிகவும் உற்சாகமூட்டும் வகையில் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் மதிப்பக்குரிய மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உட்பட சகல பதவி நிலை உத்தியோகத்தர்கள், மற்றும் சகல அலுவலக பணியார்கள்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

b11b12

b13

இன்று (01.03.2024) அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கட்டடத்தை கையளித்து திறந்து வைத்தார் . குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர் உட்பட  ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2024 01 03 at 4.16.55 PM 

 WhatsApp Image 2024 01 03 at 4.16.55 PM 1   WhatsApp Image 2024 01 03 at 4.16.56 PM 1

WhatsApp Image 2024 01 03 at 4.16.56 PM

2024 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (2024 -01-01) மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மேலதிக மாவட்ட செயலாளர்கள் , பதவிநிலை அலுவலர்கள், அலுவலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள். இதன் போது மாவட்ட செயலாளர் , மேலதிக மாவட்ட செயலாளர்கள் , பதவிநிலை அலுவலர்கள் மற்றும் அலுவலர்களால் சத்திய பிரமாணம் மேற்கொள்ள பட்டதோடு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

 

c1IMG 20240101 WA0106

IMG 20240101 WA0105IMG 20240101 WA0104

IMG 20240101 WA0076IMG 20240101 WA0098

IMG 20240101 WA0052

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட 05 பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மூன்று ஆடுகள் வீதம் ரூபாய் 75,000 பெருமதியான ஆடுகள் 120 பயனாளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று (29.12.2023) பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் உட்பட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், விவசாய பணிப்பாளர், பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
b1b2
b3

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (29) பிற்பகல் 2 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் , வினோதநோகராதலிங்கம் , திலீபன் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , ஆணையாளர்கள் , பணிப்பாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்துக்குரிய அனுமதி பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பான அனுமதி வழங்குதல், இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவான முன்னேற்ற நடவடிக்கைகள், மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் மிக விரிவாக ஆராயப்பட்டன.
 
a1a2
a3a5
 
நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மன்னார் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் பேசாலை தெற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மன்னார் சென் மேரிஸ் வித்தியாலயத்தில் இன்று (28.12.2023) பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதோடு, மன்னார் பிரதேச செயலாளர் ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்தார். தொடர்ந்து தேசிய ஜனசபை செயலாளரின் உரை, முன்னாள் சபாநாயகர் கௌரவ கருஜயசூரிய அவர்களின் வாழ்த்துச்செய்தி, பணிப்பாளர் சட்டத்தரணி அகலங்க ஹெட்டியாராச்சி அவர்களின் ஜனசபை முறை தொடர்பான தெளிவூட்டல் ஆகியன காணொளி ஊடாக இடம்பெற்றன.
தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் உரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மன்னார் செயலகத்திற்குட்பட்ட பேசாலை கிராமசேவகர் பிரிவிற்கான 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனசபை மக்களால் தெரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செயற்குழுவின் முன்மொழிவு வேலைத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஜனசபை முறை என்பது கிராமம் ஒன்றில் உள்ள மக்கள் தமது கிராமத்தில் எத்தகைய அபிவிருத்தி இடம்பெற வேண்டுமென தாமே தீர்மானிப்பதற்கு வாய்ப்பு இடம்பெற வேண்டுமென வழங்கும் ஒரு முறையியல் ஆகும். ஜனசபை முன்னோடி வேலைத் திட்டத்தின் கீழ், பங்குபற்றல் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் 27 முன்மாதிரி ஜனசபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
janasaba 8 janasaba 5
 
janasaba 4 janasaba 10
 
janasaba 3 janasaba 6
 
janasaba 7 janasaba 11
 
janasaba 12
 

மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திரு க.கனகேஸ்வரன் அவர்கள் பதவி ஏற்கும் வைபவம் சனிக்கிழமை (2023.12.23) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்க அதிபராக பதவி ஏற்க முன்னர் அனைத்து கடவுள்களினதும் ஆசிர்வாதம் பெறுமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கும் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கும் சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டு தனது பதவியேற்பை இறையருளோடு ஆரம்பித்திருந்தார்.

0.20.1

0.30.5

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக திரு க.கனகேஸ்வரன் அவர்கள் தனது கடமைகளை உத்தியோபூர்வமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

0012

3IMG 20231223 WA0022

IMG 20231223 WA0023IMG 20231223 WA0019

மன்னார் மாவட்ட செயலகத்தினால்  2023ம் ஆண்டுக்கான ஒளி விழா  இன்று (20) சிறப்புற இடம்பெற்றது.

இந்நிகழ்வினை பதில் அரசாங்க அதிபர் திரு.ய . பரம்தாமன் அவர்களின் தலைமையில் மாவட்ட அருட்தந்தையர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இந் நத்தார் ஒளி விழாவினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சிறப்பித்திருந்தனர்.

குறித்த ஒளி விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

1              2                 3

WhatsApp Image 2023 12 21 at 12.32.18 PM   WhatsApp Image 2023 12 20 at 12.40.48 PM

7   5

 

 

 

              

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பதில் அரசாங்க அதிபர் திரு.  பரம்தாமன் அவர்களின்  தலைமையில் 2023-11-03 அன்று சிரமதான பணி சிறப்பான முறையில்  இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர் உட்பட  ஏனை அனைத்து  உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

1 12

43

 

நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், தேசிய ஜனசபை நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இலுப்பக்கடவை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட இலுப்பக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்தில் (24.10.2023) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு பரம்தாமன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்
 
janasabai020304

மன்னார் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் நடாத்தும் வாணி விழா நிகழ்வு மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு பரம்தாமன் அவர்களின் தலைமையில் (2023-10-24) அன்று மாவட்ட செயலகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

nava020304

கௌரவ ஜனாதிபதி மற்றும் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், பௌத்த சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம். பைசல், மகாசங்கத்தினர் தலைமையிலான சமயத் தலைவர்கள், தூதுவர்கள், பாதுகாப்புப் படைப் பிரதானிகள், பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் (2023-10-22) கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2023 10 25 at 2.35.24 PM020304

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட வட மாகாண மாவட்ட செயலகங்களுகிடையிலான பதவிநிலை உத்தியோகத்தவர்களுக்கான மென்பந்து துடுப்பாட்ட சுற்றின் இறுதிப்போட்டியில் மன்னார் மாவட்ட செயலக அணி கிளிநொச்சி மாவட்ட செயலக அணியை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 

03020104

வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா(2023/10/06) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

 0102030405

 

    மன்னார் மாட்ட அரசாங்க அதிபரின் மணிவிழாவும் நந்தினி அம்மா மலர் வெளியீட்டு நிகழ்வும்

 

dss

 மன்னார் மாட்ட அரசாங்க அதிபருக்கு மணிவிழாவும் நந்தினி அம்மா மலர் வெளியீட்டு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (25.08.2023) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பரம்தாமன் (நிர்வாகம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, சர்வமத தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அரசாங்க அதிபராகிய இவர் தனது ஆரம்ப, உயர் கல்வியினை வங்காலை புனித ஆனாள் மகாவித்தியாலயத்தில் கற்றார். இவர் பாடசாலையில் கல்வி கற்ற காலங்களில் சிறந்த பக்தியும் ஒழுக்கமும் கல்வியும் ஆடல் பாடல் விளையாட்டு உடற்பயிற்சி துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் தனது ஆர்வமான கற்றல் மூலம் பல்கலைக்கழகம் தெரிவாகி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப்பட்டதாரியாக பட்டம் பெற்று 1986 இல் வெளியேறினார்.
முதல் நியமனத்தை 1989.01.20இல் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்திலும் பின்னர் கண்டி திகண ரஜவல மகா வித்தியாலயத்திலும் பின்னர் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதியிலேயே ஆசிரியரான திரு. ஸ்ரான்லி டி மெல் (அதிபர், புனித ஆனாள் மகா வித்தியாலயம், வங்காலை) அவர்களை கரம்பிடித்து இல்லற வாழ்வில் இணைந்து கொண்டார். இதன் பலனாக செல்வன். வோட்ஸன் (அமரர்), செல்வி. அருள் ஷPபா (பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோரை பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்திபெற்று 1995.04.03இல் இலங்கை நிர்வாக சேவையில் முதல் நியமனத்தைப் பெற்றார். அதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவையின் புகுமுகப் பயிற்சியினை ஒரு வருட காலத்துள் முடித்துக்கொண்டு இலங்கை நிர்வாக சேவையின் முதல் பணிப்பொறுப்பினை மன்னார் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக 1996.04.01ஆம் திகதி பொறுப்பேற்றார். 2005.05.17 வரை சிறப்பாக தனது கடமையினை புரிந்துள்ளார்.
உதவி ஆணையாளராக கடமையாற்றிய வேளையில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்த பதினொரு கமநல சேவை நிலையங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று பறையனாலங்குள சோதனை முகாமில் சோதனைக்குட்படுத்திய பின்னர் லொறிகள் மூலம் உரிய காலத்தில் பசளை, மருந்து விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் விவசாய வீதிகள், பல குளங்கள் திருத்தப்பட்டதுடன் கழிவு நீர் வாய்க்கால்கள் பல அமைக்கப்பட்டன. கறுக்காய் குளத்தில் அமைந்துள்ள பெரிய களஞ்சியசாலை மற்றும் அரிசி ஆலை என்பனவும் கட்டப்பட்டன. உழவு இயந்திரங்கள், லொறிகள் ஆகியவை விவசாய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2005.05.18 முதல் 2012.07.29 வரையான 07 வருடங்கள் மன்னார் நகரத்தின் பிரதேச செயலாளராக அரும்பணியாற்றினார். அதனை தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபராக மன்னார் மாவட்ட செயலகத்தில் பதவியில் இருந்தபோது (2012.07.30-2018.02.15 வரை) கூடுதலான பணிகளை ஆற்றியுள்ளார். பின்னர் மேலதிக செயலாளர் மலைநாடு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணிபுரிந்து மலைநாட்டு மக்களுக்கு இந்திய வீட்டுத் திட்டங்களை வழங்கியது முக்கியமாகும். அதனை தொடர்ந்து பிரதி பிரதம செயலாளராக வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் பணியாற்றினார். அப்போது பல பயிற்சிகளை வழங்கியதுடன் வட மாகாணத்தின் சகல ஆளணித் தரவுகளையும் சீர் செய்தார்.
அதன் பின்னர் அரச அதிபராக மன்னார் மாவட்ட செயலகத்தில் 2020.11.16இல் இருந்து 2023.08.25 வரை பணியாற்றினார். கொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளின் போது சுகாதாரப் பகுதியினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொற்று நீக்கல் செயற்பாடுகளின் காரணமாக மாவட்டத்தில் குறைந்தளவிலான நோயாளர்கள் இணங்காணப்பட்டனர். கொரோனா தொற்றுக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கான வழி அனுமதிகள் வழங்கி உரிய நேரத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாது சேவையாற்றினார்.
எரிபொருள் பற்றாக்குறையின் போது கிடைத்த வரையறுக்கப்பட்ட எரிபொருளை குடும்பப் பதிவு அட்டைகள் மூலம் சிறப்பான முறையில் வழங்கி எரிபொருள் பற்றாக்குறையினை தீர்த்து வைத்தார். முதியோருக்கான இரண்டு ஓய்வு இல்லங்களை அமைத்தார். அத்துடன் முதன்முறையாக மன்னார் மாவட்டத்துக்கென மாவட்ட கீதம் ஒன்றினை உருவாக்கி அதனை அனைத்து கலைஞர்களின் துணையுடன் சிறப்பான விதத்தில் வெளியீடு செய்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான வர்த்தக கண்காட்சியினை வெகு சிறப்பாக நடாத்தினார். சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் இரண்டினை அமைத்து சிறுவர்களின் தேவையினை பூர்த்தி செய்தார். நானாட்டானில் ஆரோக்கிய உணவகம் ஒன்றினையும் திறந்து வைத்தார். மன்னார் மாவட்ட கலைஞர்கள் பலரை கௌரவித்து வாழும் போதே வாழ்த்தினார். அத்துடன் பறவைகள் அவதானிப்புக் கோபுரம் 02 திறந்து வைக்கப்பட்டது. 2022 நவம்பர் மாதத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களது மன்னார் வருகையின் போது அந்நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தினார். 03 வெளிநாட்டு தூதுவர்களின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தின் நிலைமையினை எடுத்துக் கூறினார்.
இவ்வாறு தனது சேவை காலத்தை மிக சிறப்பான முறையில் சேவையாற்றிய எமது மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் அவர்களுக்கு மாவட்ட செயலகம் சார்பில் நன்றியும், அவரது இனிவரும் காலம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
1 2
 
3 4
 
5
 
 
 
 
 
+66
 
 
所有心情:
Rtn R. Robin、Thevarasa Ketheeswaran和其他75位用户
 

 

மாந்தை மேற்கு பிரதேச செயலகபிரிவு பாலைப்பெருமாள்கட்டு கிராமத்தில் முதியோர் பகல் பராமரிப்பு நிலைய அடிக்கல் நாட்டல் நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செயலகபிரிவு பாலைப்பெருமாள்கட்டு கிராமத்தில் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் அமைக்கும் வேலைதிட்டத்தை மாவட்ட செயலாளர் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்ததுடன், அக்கிராம மக்களால் மாவட்ட செயலாளருக்கு சேவைநலன் பாராட்டு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

  2

3  5

6

4

 

 

 

 

 

 

 

 

 

 

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்டான்லி டிமெல் அவர்களின் ஏற்பாட்டில் இன்று(30.05.2023) காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ குலசிங்கம் திலீபன், றிஸாட் பதியுத்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் , வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு, அவற்றின் தற்போதைய நிலைமைகள் ஆராயப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் வீதி, போக்குவரத்து, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், கல்வி, சிவில் நிர்வாகம், வீட்டுத்திட்டம், மின்சாரம், காணி, பொது உட்கட்டமைப்பு வசதிகள், நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கலந்துரையாடலில் வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாணசபை மற்றும் மன்னார்மாவட்ட திணைக்களத்தலைவர்கள , வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
345231079 688404249761417 88868087939119127 n 350356019 286682353698947 82419692415490170 n
 
 
 
 
348672912 1300197737600826 2422205770743079259 n
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மன்னார் மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடனான கூட்டம்

மன்னார் மாவட்ட தனியார் கல்வி நிலையங்களின் இயக்குனர்களுடனான கூட்டம் இன்று(25) மாலை 3 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்டான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை
1.ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலைைங்களை காலை 11 மணிக்கு பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.
2.கிழமையின் ஏழு நாட்களிலும் மாலை 6 மணியுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
3.பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அவசரமாக பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் மாணவர்களின் ஒழுக்கம், ஆன்மீகம் போன்றவற்றில் தனியார் கல்வி நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும். உரிய இருக்கை வசதி,சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெளிவூட்டினார்.
குறித்த கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள், மன்னார் பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், தனியார் கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள், மாவட்டச் செயல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
345464073 957244495472603 3196710145637100545 n 346633210 2702172903255449 4438415383440563246 n
 
346665873 942205000446624 8157093862998639155 n 347432503 6698490926862442 8136586734835292306 n

வீட்டு திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு

"உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்" எனும் தொணிப் பொருளின் கீழ் 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு பூரணமாக்கப்பட்ட வீடுகளுக்கான காசோலையானது கிராமியப் பொருளாதார இராஜாங்க கௌரவ அமைச்சர் மஸ்தான் அவர்களினால் 76 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது இன்று (2023.05.17) காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்டான்லி டீ மெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர், மன்னார் பிரதேசச் செயலக பிரதேசச் செயலாளர், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2
 
 
3 4
 
5 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னாரை சேர்ந்த குறும்பட இயக்குனருக்கு பாராட்டு விழா!!!

யாழ்ப்பாணம் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்பட்ட குறும்பட போட்டியில் மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு கவிவருமன் இயக்கிய உயிரைக் கொல்லும் என்ற தலைப்பின் கீழ் யாவரும் கேளிர் என்ற குறும்படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற இரு பிரிவில் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் தேசிய ரீதியாக போட்டியிட்ட 63 குறும்படங்களில் போதைப்பொருள் தொடர்பான இவரது படமே முதலிடம் பெற்றுள்ளது.
குறித்த இளைஞனை கௌரவிக்கும் முகமாக இன்று(10) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிவருமான திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் குறித்த பட இயக்குனருக்கும் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
 
 
1 2
 
 
 
3 4
 
 
 
5 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தள்ளாடியில் வெசாக் வைபவம்

நேற்று(2023/05/05) மாலை மன்னார் மாவட்ட கட்டளை தளபதி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

 2

 

3 41

மன்னார் மாவட்ட செயலகத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு

2023 ஆம் வருடத்திற்கான இப்தார் நிகழ்வானது நேற்று(2023/04/20) மாலை 5:30 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்டான்லி டிமெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர் மன்னார், சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

342349841 218334810892794 1256950154610544310 n  342340029 6124703677612742 3912102718367583947 n

342338382 925737491908255 3463077420666655820 n  342609587 247376281001968 222828412076950111 n

 

342014128 802992560707012 377755884887487088 n

 

 

 

 

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தின நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. அ. ஸ்ரான்லி டிமல் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (04.02.2023) காலை 7.50 மணியளவில் ஆரம்பமானது.

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுதந்திர தின பேரணி ஆரம்பித்து மன்னார் மாவட்ட செயலகத்தை காலை 8.15 அளவில் வந்தடைந்தது. பின்னர் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும் ஆன திருமதி.ஸ்ரான்லி டிமல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து இரு தேசிய மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தேச விடுதலைக்காக போராடி உயிர்நீர்த்த அனைவருக்கும் இரண்டு நிமிட நேர அமைதிபிராத்தனை இடம்பெற்றது. அத்தோடு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும், பலூன் பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடனும், சர்வமதகுருமார்களின் ஆசியுரைகளுடனும் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந் நிகழ்வின்போது சுதந்திர தினத்தின் தங்களது 75வது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரஜைகளின் பிறந்ததினக்கொண்டாட்டம் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்றதோடு இம்மாதத்தில் தமது 75வது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரஜைகளை கௌரவித்தலும் இடம்பெற்றது. பின் சுதந்திரதின போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கலை கலாசார நிகழ்ச்சிகளும், மூலிகை மரநடுகையும் இடம்பெற்று நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

மேற்படி நிகழ்வில் பொலிஸ் பொறுப்பதிகாரி, முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம கணக்காளர், பிரதம உள்ளககணக்காய்வாளர். பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள். கிளைத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

 328248103 3518559211747952 3426096156122857513 n 328791135 1148687562506308 4169011939241081685 n 328686972 1181142839203807 8568333492291307777 n

328125505 1275179473346418 4574784890171732975 n 328232949 1197303267559447 1507295605133918411 n 328319354 1115390999139557 8532153325863179068 n

329006828 3478954859004682 2958292454681923481 n 328956226 708602680959349 1240931366074664221 n 328927058 906024183869913 2435107640906648181 n

328095733 1213864999335855 4504500205124098026 n 321670714 524202406241527 7228326339871210537 n 329001681 532928232007151 5456754572516888716 n

328567591 1368408420647790 2530519265547495433 n 329107699 725526602402106 6364174394359823116 n 328343055 738999277736273 9117920829758032617 n

328720112 8633919480012178 5712710795151187821 n 328874179 1310700226158371 5936293254523962902 n 329152821 899931071429062 5546645659858132985 n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது.

NEWYR231 NEWYR232 NEWYR233

 NEWYR234 NEWYR235 NEWYR236 NEWYR2315 NEWYR2310 NEWYR2311

 NEWYR2312 NEWYR2313 NEWYR2314

NEWYR2315 NEWYR2316 NEWYR2317

NEWYR2318 

 

 

மன்னார் மாவட்ட செயலகத்தினால்  2022ம் ஆண்டுக்கான ஒளி விழா தகவல் தொழில்நுட்ப பூங்கா மேல் மண்டபத்தில் இன்று (27) சிறப்புற இடம்பெற்றது.

இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட அருட்தந்தையர்கள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இந் நத்தார் ஒளி விழாவினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சிறப்பித்திருந்தனர்.

குறித்த ஒளி விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

 

xmas1 xmas2 xmas3 xmas4

xmas5 xmas6

xmas7 xmas8

xmas9 xmas10

xmas11 xmas12

xmas13 xmas14

xmas15 16

 

 

 

 

 

 

 

 

2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) நடைபெற்றது.

new year 1 new year 2
new year 3 new year 4
new year 5 new year 6
new year 7 new year 8
new year 9 new year 10

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக COVID-19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமடு கிழக்குப் பகுதிகள் 11.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற விவசாயிகளின் உற்பத்தி பொருட்களைப் பாதுகாக்கும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல்லை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் திரு.என்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.மகேஸ்வரன், மாகாண விவசாய பணிப்பாளர் திரு.சிவகுமார், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.ஷுகூர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான எ.ஸி.நௌபில் மற்றும் பி.என். லாபிர் ஆகியோருடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

base 01  base 02 base 03
     

 

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக "தொழில் வழிகாட்டல் வாரத்தை" இவ்வருடம் ஒக்டோபர் 04ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை நடாத்துவதற்கு மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை(Online) முறையினூடாகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு திறந்த போட்டிகளுமாக சித்திரம், கவிதை, கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகளை நடாத்த மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
விண்ணப்ப முடிவுத்திகதி ஆகஸ்ட் 23ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் online ஊடாக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு மாவட்ட செயலக மற்றும் தத்தமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேலதிக தகவல்களை பெற மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தருடன் 0770743231/ 0771157433 தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொள்ள முடியும்.

மேலதி தகல்கள் இத்துடன் இணைக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் விளக்கமாக உள்ளது.

தாமதியாது உடன் விண்ணப்பியுங்கள்.

234739904 1194508221033036 1640088424567894898 n

240593336 1194508257699699 5642389674585842860 n

இலங்கை அரசாங்கம் நடப்பாண்டு தொடக்கம் "டங்கன் வைட்" அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்த நாளாகிய ஜீலை 31ஆந் திகதியை விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம் செய்துள்ளது.

அதனை முன்னிட்டு தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (3) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் அரச நிருவாக சுற்றிக்கையின் பிரகாரம் இடம்பெற்றது.

மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, உடற்பயிற்சி மற்றும் உள்நாட்டு இயற்கை உற்பத்தி உணவுகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதாக அரசாங்க அதிபர் அவர்களின் விசேட உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் அலுவலக உடையில் பங்கேற்கக்கூடியதான 15 நிமிட எளிய உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

மேலும் ஆரோக்கியமான சந்ததியினை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித் திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே தேசிய விளையாட்டு தினத்தின் குறிக்கோளாகும்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 வைரஸ் காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.குணபாலன், பிரதம கணக்காளர் திரு.செல்வரட்ணம், திட்டமிடல் பணிப்பாளர் திரு.மகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

 

 

yoha 13

yoha 14

yoha 15

yoha 12

yoha 10

yoha 9

yoha 8

yoha 7

yoha 5

yoha 6

yoha 3

yoha 2

yoha 1yoha 11

தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு இன்று(17/07/2021) வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும், இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . அ . ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் அன்னை இல்ல வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் முதல் அம்சமாக மங்கள விளக்கேற்றலுடன் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்தார். தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் புலவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
மேலும் அன்னை இல்லத்தின் மாணவர்களுக்கு அரசாங்க அதிபரினால் அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்னை இல்லத்தின் நிர்வாகி, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள் மற்றும் அன்னை இல்லத்தின் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் பெரியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வானது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 217305318 1168545516962640 3505795781458388111 n  217702092 1168545576962634 2601094367480369037 n  215551941 1168545680295957 8249010708038896481 n
 215551941 1168545680295957 8249010708038896481 n  216001646 1168545793629279 5799030814031885898 n  208650773 1168546336962558 6068546877408711767 n
 213078028 1168546383629220 3738308149355551390 n  211990225 1168546193629239 4751985120148174758 n  212764918 1168546556962536 2138303144787190187 n
 216909638 1168546466962545 5907006708848426273 n  215470473 1168546910295834 5711983326524547067 n  

 

 

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன்வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு, நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள், “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயத்துறைக்குள் சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையினை மேற்கொள்ளும் இடம் மற்றும் இயற்கை பசளையூடாக மேற்கொள்ளும் பயிர்ச் செய்கையினையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் 09/06/2021 காலை 9.30 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர்,மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2021 06 14 at 09.16.21  WhatsApp Image 2021 06 14 at 09.16.19  WhatsApp Image 2021 06 14 at 09.16.12 
WhatsApp Image 2021 06 14 at 09.16.16  WhatsApp Image 2021 06 14 at 09.16.18   

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன்

மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும்  வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பமானது.

இந் நிகழ்வில் 5 பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ,சர்வ மத தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட செயலாளர் திரு .சி .ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக திருவாட்டி . சரஸ்வதி மோகநாதன் (செயலாளர் – உள்ளூராட்சி அமைச்சு வடக்கு மாகாணம்.) அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், “மன்னெழில்” சிறப்பு மலர் வெளியீடும், பிரதேச செயலகங்களினூடாக தெரிவு செயப்பட்ட 25 கலைஞர்களுக்கு “மன்கலை சுரபி” விருது வழங்கலும் இடம்பெற்றது.

இவ் விழாவில் பட்டிமன்றம், நாடகம், நடனம் , நாட்டுகூத்து  என பல்வேறு நிகழ்வுகள் மேடையேற்றபட்டன.   

 

 

 

தகவல்

திரு .இ .நித்தியானந்தன் 

மாவட்ட கலாசார உத்தியோகத்தர்

மன்னார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது . 

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில்   மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில்  சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்  திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .

காலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில்  01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில்  நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை  தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட  திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்றவை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.

DSC 0143

 

DSC 0154

 

DSC 0151

 

DSC 0150

 

DSC 0206

 

DSC 0228

 

DSC 0250

 

DSC 0251

 

DSC 0233

 

 

 

 

 

 

 

 

 

 

மன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்  பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ்  அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில் 150ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 15ற்கும் மேற்பட்ட  போட்டிகள்  ஒழுங்கு செய்யப்பட்டன.

இந் நிகழ்விற்குரிய அனுசரணைகளை, அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம்,ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு  மற்றும் தேனீ  - மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவி அமைப்பு என்பனவும் மேற்கொண்டிருந்தன.

 

BA

 

BA 0001

 

DSC 0670

 

DSC 0667

 

DSC 0675

 

DSC 0901

 

DSC 0720

 

DSC 0735

 

DSC 0737

 

DSC 0741

 

DSC 0918

 

DSC 0885

DSC 0590

 

DSC 0872

 

DSC 0758

 

DSC 0957

 

DSC 0962

 

DSC 0050

 

DSC 0058

 

 

 

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க சபை போதகர் ஏ.நிமால் கூஞ்ஞ, வண.தர்மகுமார குருக்கள், வண.திரு.ஜி.அன்ரனி டேவிற்சன் மன்னார் நகர சபை தவிசாளர், வண.திரு.எஸ்.எச்.எம்.முஜாகிர் மன்னார் பிரதேச சபை தவிசாளர், வண.திரு.ஏ.ஜி.ஏ.சுபீகான் முசலி பிரதேச சபை தவிசாளர், மன்னார் நகர சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள்(மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு), திரு.சபுர்தீன் சிரேஸ்ட சட்டத்தரணி, திரு. கதிர்காமநாதன் சைவ மத ஒன்றியம்,திரு.திலீபன் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், திரு விக்ரமசிங்க மன்னார் நகர பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.புஸ்பகுமார சிலாவத்துறை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.வதுலியத்த இலுப்பைக்கடவை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.சசந்த அடம்பன் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, திரு.இ.ஜி.குணரத்ன உதவிஃதலைமையிடத்து ஆய்வாளர் மன்னார், திரு உடவத்த தலைமையிடத்து ஆய்வாளர் தலைமன்னார், திரு.சோமஜித் பேசாலை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, CCT நிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஜெகான் பெரேரா, திரு ஜோ வில்லியம் தவிசாளர், மன்னார் மற்றும் மடு பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மத ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

கடந்த 21ம் திகதி குண்டுதாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து மன்னார் மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

  1. 01. மன்னார் மாவட்டத்தில் 06 பௌத்த ஆலயங்களும், 142 கிறிஸ்தவ ஆலயங்களும், 80 முஸ்லிம் பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன. அங்கு வருகை தருகின்ற அனைத்து மக்களும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.
  2. 02. தலைமன்னார் மற்றும் பேசாலை கடற்பரப்பினால் இந்தியா செல்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
  3. 03. பொலிஸ் உதவியுடன் சாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  4. 04. வழிபாடுகள் நடைபெறும்போது தலங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும்.
  5. 05. பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாட்களிலும் பின்வரும் நாட்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்விடயம் தொடர்பான அறிக்கைகள் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
  6. 06. யாருக்கேனும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில் வெடிகுண்டுகளுக்கு மதம் மொழி தெரியாது என்பதால் இந்நாட்களில் நாம் மிக அவதானமாக இருக்குமாறும் எவரிலேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்காக மக்களின் விசேட உதவிகளை தாம் நாடி நிற்பதாக கூறினார்.

 

20190430 141925 20190430 142219 20190430 150653 20190430 154635 20190430 154657 20190430 154721

 

 

 

 

தலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில்  மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் நேர முகாமைத்துவம், வினைத்திறனான தொடர்பாடலின் அவசியம், தேவைகளை இனங்காணல் போன்ற விடையங்கள் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது..

 

AAD 03 01

சமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

4f28a370 5251 49a4 b5d3 3d6177896261 cef8fe38 89a3 4e3e 8e1d 952c3fc7975d IMG 5879c55b9b3e0bf0e760d4ddbda3c44a V21d1c2db 3935 48c1 aac5 d6840bf46d54 23da01ff 85b5 42f6 82ef 01d6dc41b008 7621235c 1fb4 4e81 b843 fd1c62e01304 a74fdcf1 6f0a 4237 931b bdfbcd433a3d e8e820d8 b28f 47f8 bdbb c4dc2901b4ca

 IMG 4029a0cbc2683c87a6a705f75ad7057f V

கூட்டறிக்கை – 28.03.2019

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள  முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.

உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின்  HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு  அமைவாக,

மாவட்ட மற்றும்  பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ்,

மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின்  தலைமையில் 28.03.2019 அன்று மு.ப 09.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக தாமரை தடாகம் (ICT UNIT) மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு  தலைமை தாங்கிய மேலதிக அரசாங்க அதிபர் தமது உரையில் உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் சுற்றறிக்கைக்கு இணங்க இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுள்ளது என்றும் இங்கு சமூகம் அளித்து இருக்கும் அனைவரும் அமைச்சின் நோக்கம் நிறைவேறவும் மன்னார் மாவட்டம் இணைத்தள வடிவமைப்பு மற்றும் இற்றைப்படுத்தலை முன்னேடுத்து செல்ல  பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் மாவட்ட செயலக ICT  துறைக்கு பொறுப்பான அலுவலர்களும் 5 பிரதேச செயலகங்களில் தலா  02 அலுவலர்கள் வீதம்  10 அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ICT பிரிவில் கடமை புரியும் திரு.க .பரத் என்பவரால் Internet, Intranet, Extranet சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு Joomla மென்பொருளின் தன்மை, அது இயங்கும் விதம், அதன் உட்கட்டமைப்பு, Software, Freeware, Shareware போன்றவைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தேடல் பொறிகளும்,அரச  இணையத்தளங்களும் அதில் பிரசுரிக்கப்படும் ஆக்கங்களும் தேடல் பொறியின்  இயல்பான கட்டமைப்பு தொடர்பான விடயங்களும், இணையத்தளங்களே  எதிர்கால பிரதான தகவல் ஊடகம் என்பது பற்றியும் அவற்றைப் பாதுகாப்பானதாகவும்,வினைத்திறன் மிக்க வகையிலும் அரச சார்பான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தும் விதம் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் (05) இணைய தளங்கள் பார்வையிடப்பட்டு ,அவற்றுடன் பிற மாவட்ட இணையத்தளங்களும் ஒப்பு நோக்கி அவற்றில் இருக்கும் நல்ல விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டது.

உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்தின் இணைப்பான மாவட்ட மட்ட பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற படிவத்துக்கு அமைவாக எமது மாவட்டத்திற்குரிய 06 இணைய தளங்களும் தனித்தனியே ஆய்வு செய்யப்பட்டன.

 

IMG 19e893e81a332b3d7afb15a9890c9d21 V IMG ef908a5d374731710f45c232083f5689 V IMG e1dc8fe7b0926dc0f10fddea5f15161f V

 

11.00 am – 11.30 am   - சிற்றுண்டி இடைவேளை (Tea brake)

மேற்படி படிவத்திற்கு அமைய அவ் ஆய்வில் இனங்காணப்பட்ட இற்றைப்படுத்தப்படாத(Update)  தரவுகள் /தகவல்கள்  இனங்காணப்பட்டு அந்ததந்த பிரதேச அலுவலர்களினால் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டது. மேற்படி இற்றைப்படுத்தலின்  போது இணையதளத்தின் இயக்க வேகமானது வெகுவாக குறைத்து இருந்ததால் இற்றைப்படுத்தலின்  வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டதால் மேற்படி விடயத்திற்கு பொறுப்பதிகாரியான இலங்கையின் ICTA  வில் கடமைப்புரியும் கருத்திட்ட முகாமையாளர் பாக்யா குமாரசிங்க அவர்களுக்கு மின்னஞ்சல் ,தொலைபேசி ஊடாக முறைப்பாடும் அளிக்கப்பட்டது .

தொடர்ச்சியாக அலுவலர்கள் தரவு இற்றை படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான விடயங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த படியினால்,அவற்றிற்கு என தனியான கோப்பு (File) முகாமைத்துவம் செய்வதுடன் உரிய அலுவலர்களின் அனுமதிப்பெற்று அவர்களின் மேற்பார்வையில் செய்திகளை இற்றைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

1.30 pm -2.30 pm – lunch time

மேலும் மேலதிக செயலாளரினால் இணைக்கப்பட்ட மேற்படி கடிதத்தின் படிவத்திற்கு அமைவாக 31.03.2019 திகதிக்கு முன்னராக இற்றைப்படுத்தும் பணிகளை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக இவ் இற்றைப்படுத்தல் பணியில் பிரதேச செயலக பிரிவில் கடமை புரியும் அலுவலர்கள் எதிர் நோக்கும் கீழ்வரும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டது.

  • மேற்படி இற்றைப்படுத்தல் பணிக்கான கடமை அறிவுறுத்தல் கடிதமானது குறிப்பிட்ட அலுவலர்களுக்கு இதுவரையில் கையளிக்கப்படாமை.
  • கணினி மற்றும் இணைய வசதி குறைவாக உள்ளமையும் பிரதானமாக பிரச்சினையாக இனங்காணப்பட்டது.

3.15 pm -3.30 pm – Tea time

அலுவலர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் சேகரிக்கப்பட்டு தொடர்பாடல்களை மேலும் இலகுபடுத்தல் தொடர்பான “ICT MANNAR”  எனும் பெயரில் Viber  மூலம்  குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

தொடர்ச்சியாக இப் பயற்சி தொடர்பான நிறை, குறைகள் பயிற்சியில் பங்குபற்றியவர்களிடம்  வினவப்பட்டதுடன் பிற்பகல் 4.30 மணியளவில் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் தொடர்பான செயலமர்வு/கூட்டம்  முடிவுறுத்தப்பட்டது.

வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

 

IMG 7b99f016fdcf5200f6567931ad30e6cf V

 

IMG 2cbd1e61c6e2d3e32172f002d23afa5a V

அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான  கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.

FB IMG 1554556983071

FB IMG 1554556986551

 

 

 

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு
 (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது .
இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும்,  அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில்  அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு உறுதி பூணுமாறும்  அறிவிக்கப்பட்டதோடு அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதியுரை எடுத்துக்கொண்டனர்.
 
 
FB IMG 1554525364650
 
FB IMG 1554525374146
 

யுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என 200ககும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

IMG 2c48d32c1a406b9ac29bcd743f1fd26e V

IMG 4bf3bdb8add48cab3b4e4f8a537882a7 V

 

IMG ccff740e32b599ef9735a22a0fd68971 V

 

      adg 

      

 

   

 

 

 

 

 

MR M.PIRATHEEP

Focal Point

 Phone  Number -  023 2222236

 Whatsapp Number - 077 9905324

 Email ID - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

                                                                                  Scan this QR code using your mobile camera to access the IAU Complaint Portal

      DISTRICT SECRETARIAT - MANNAR

iautitle                     IAU    iauimg01edited

 

             

 tamil English  Sinhala 

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

 

01

 02

 

03

 

04

மன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டு கண்டல் மரங்களை நாட்டி வைத்தனர் இந் நிகழ்வுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இயங்கும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள: சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர்.

 
AB
AF
AS

Right to Information

 

RIGHT TO INFORMATION

RTI Forms and Resources

 

 

Designated Officer

Mr.K.Kanakeshwaran

District Secretary/Government Agent

Tel: +94 23-2222235  Fax:+94 23-2222232

Information Officer

Mr.M.Piratheep

Addtional District Secretary

Tel:+94 23-2222236

E-Mail Address :- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Postal Address :- District Secretariat,Mannar

 

&;